Homeசெய்திகள்அரசியல்ஆந்திரா சட்டப்பேரவையில் கருப்பு உடை - ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரா சட்டப்பேரவையில் கருப்பு உடை – ஜெகன் மோகன் ரெட்டி

-

ஆந்திராவில் கவர்னர் உரையுடன்  தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை கொலை சம்பவங்களை கண்டித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

ஆந்திரா சட்டப்பேரவையில் கருப்பு உடை - ஜெகன் மோகன் ரெட்டிஆந்திர மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனையொட்டி சட்டப்பேரவை, மேலவையில் கவர்னர் அப்துல் நசீர் முதல் கூட்டத்தொடர் குறித்து உரையாற்றினார். கவர்னர் உரை தொடங்கியது முதல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தில் கொலை அரசியல் ஒழிய வேண்டும், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ, எம்.எல்.சி.க்கள் கோஷம் எழுப்பினர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரின் கோஷத்திற்கு மத்தியில் கவர்னர் உரையை தொடர்ந்தார். இதற்கிடையே மாநிலத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதை கண்டித்து இந்த அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி   ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்  எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக சட்டபேரவை வளாகத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி  தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் மற்றும்  அக்கட்சியின் அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகள் கருப்பு சால்வை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். அப்போது கையில் மாநிலத்தில் அக்கட்சியினருக்கு எதிராக நடந்த வன்முறை தாக்குதல் தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தியபடி சட்டசபை வளாகத்தில்  ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்ற முழக்கங்களை எழுப்பியவாறு சட்டசபையை நோக்கி செல்ல முயன்றனர்.

அவர்களை வாசலில் தடுத்த போலீசார் தலைவர்கள் கையில் இருந்த பாதகைகளை பிடுங்கி கிழித்து எறிந்தனர். இதனால் கடும் கோபம் அடைந்த  ஜெகன் மோகன் போலீசாரின் நடத்தையால் கடும் கோபமடைந்தார். எம்எல்ஏக்கள், எம்எல்சிகளிடம் இருந்து பதாகைகளை வாங்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என எதிர்ப்பு தெரிவித்தார்.

அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ‘மதுசூதன் ராவ் ஞாபகம் இருக்கா… எப்பவுமே இப்படி இருக்காது.  நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம்.  உங்கள் தொப்பியில் இருக்கும் சிங்கங்களின் அர்த்தம் என்ன தெரியுமா? அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சல்யூட் அடிக்க  அல்ல.ஜனநாயகத்தை பாதுகாக்க நீங்கள் இருக்கிறீர்கள். “நினைவில் இருங்கள்” என்று ஒரு போலீஸ் எச்சரிக்கை விடுத்தார்.

அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் அராஜகம் என்றும், காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்றும் ஜெகன் மோகன் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, சட்டசபைப்பேரவை முன்பு போராட்டம் நடத்தினர்.

MUST READ