இன்றும் சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, மீண்டும் இதுபோன்ற சாரிய ரீதியிலான தாக்குதல் நட்க்கா வண்ணம் காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவும் சமூகநீதியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொண்டு செல்ல விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை கடுமையாக கண்டித்துள்ளாா்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, மேலப்பிடவூரில் புல்லட்டில் சென்ற விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனை சாதிவெறி பிடித்த 3 நபர்கள் எங்கள் முன் எப்படி நீ வாகனத்தை ஓட்டி செல்லலாம் என, அவரது இரு கைகளையும் வெட்டியதோடு மட்டுமல்லாமல் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளனர். கல்லூரி மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
நமது நட்டில் விஞ்ஞானத்தில் முன்னேறிய நாகரீக காலத்தில் கூட இதுபோன்ற சாதிய வன்கொடுமை தாக்குதல் நடைபெறுவது என்பது மனித குலத்திற்கு இழுக்கானது. இது போன்று தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவுகளின் கீழும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும். காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இதுபோன்ற தீண்டாமை கிராமங்களை அடையாளம் கண்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்துறைக்கு என ஒதுக்கப்பட்ட சிறப்புநிதியை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்.
இவர்களை போன்ற சாதிய மனப்பான்மை கொண்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி பூண்டுள்ளார். மேலும் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படாமல் இதுபோன்ற சமூகநீதிக்கு வேட்டு வைக்கின்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி உருவாகிறதா..? ஒரேபோடாக போட்ட ஓபிஎஸ்