Homeசெய்திகள்அரசியல்‘இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகா..?’விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் புஸ்ஸி ஆனந்த் வீடியோ

‘இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகா..?’விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் புஸ்ஸி ஆனந்த் வீடியோ

-

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக். 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கைகளும் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் இந்த மாநாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

கட்சி மாநாட்டின் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றார். அப்போது வேலையே போனாலும் பரவாயில்லை.. மாநாட்டிற்கு வர வேண்டும் என்று அவர் கூறிய கருத்துகளே சர்ச்சையைக் கிளப்பியது.

ஏற்கனவே சாலையில் ஓரமாக இருந்த குப்பைகளை வாரி இவர் ஓரமா போடுவது போல் வீடியோ எடுத்து மீடியாவில் பரவ விட்டதும் கேலிக்கு உள்ளானது.

அதேபோன்று கனமழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும்போது கூட விஜய் போட்டோவை கையில் பிடித்தபடி இவர் வீடியோவுக்கு போஸ் கொடுத்ததும் வைரலானது. வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் வேதனையில் இருக்கும் போது இப்படி மட்டமாக விளம்பரப்படுத்தும் இவர்களை நம்பியா விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார் என பலரும் விமர்சித்தனர்.

அடுத்து கட்சி நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெரும் வீடியோக்களும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நடிகர் தாடி பாலாஜி காலில் விழுந்த வீடியோ விஜய் ரசிகர்களையே வெறுப்படையச் செய்தது. இந்நிலையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மண்டபத்தில் நடந்து வரும்போது புஸ்ஸி ஆனந்த் தனது நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கடும் விவாதப்பொருளாகி உள்ளது.

https://x.com/Peopleofficials/status/1848570831573508151

‘‘இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகா? அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது. தன்னை சுற்றி இருப்பவர்களையும் வழிநடத்த தெரிந்திருக்க வேண்டும். அதேபோன்று புஸ்ஸி ஆனந்த் உடன் இருக்கும் வரையில் விஜய் அரசியலில் ஜொலிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்’’ என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ