Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு – டி.ஆர்.பாலு எச்சரிக்கை

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு – டி.ஆர்.பாலு எச்சரிக்கை

-

- Advertisement -

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி வழங்கும் வரை ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் மேற்கொள்வோம் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு – டி.ஆர்.பாலு எச்சரிக்கை100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய ரூ.4034 கோடிநிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சென்னைக்கு அருகாமையில் உள்ள குன்றத்தூர் ஒன்றியத்தில் பரணிபுத்தூரில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய ஏழை எளிய மக்களுக்கு ஈவு இரக்கம் இல்லாமல் ஐந்து மாதம், ஆறு மாதம் சம்பளம் தராமல் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. இதை கண்டிக்கும் விதமாகத்தான் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஊராட்சிகளில் தலைவர்கள் நமது கட்சியை சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியாகவுகம் நாம் இருக்கிறோம். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நாம் பணம் தராதது போன்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஒன்றிய பாஜக அரசு தான் தரவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த 100 நாள் வேலைக்கு மிகவும் ஏழை, பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் தான் 100 நாள் வேலையை செய்கிறார்கள். காலை முதல் மாலை வரை செய்திருக்கிற வேலைக்கு கூலி தராமல் வஞ்சிக்கிற ஆட்சி தான் மத்தியில் இருக்கிறது.

ஆர்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் டி. ஆர். பாலு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி இடம் பேசும் போது கலைஞரின் எண்ணத்தில் உதித்த திட்டம் தான் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம். விவசாயம் முடிந்து இருக்கும் பொழுது நிதி ஆதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்று மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவு தான். 100 நாளைக்கு வேலை கொடுக்க வேண்டும், வேலைக்கு உத்தரவாதம் தர வேண்டும், வேலை உறுதி திட்டம் என்று பெயர் வைத்தோம். வேலை கொடுக்க வேண்டும் சம்பளம். சரியாக கொடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் வாழ்வாதாரம் சரியாக சிறப்பாக இருக்கும் என்று சட்டம் தேவை என்று ஒன்றிய மத்திய சபையில் முடிவெடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருக்கும் வரை எவ்வித பிரச்சினை இல்லாமல் செயல்படுத்தப்பட்டது.

இதற்கான நிதியை ஒன்று அரசை முழுமையாக கொடுக்க வேண்டும். மத்திய அரசு கொடுக்கவில்லை என்றால் மாநில அரசு எப்படி கொடுக்க முடியும்.  ஐந்து மாதமாக ஏன் கொடுக்கவில்லை என்று கேள்வி கேட்கிறோம். உரிய பதிலை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் வழங்கவில்லை. ஒன்றிய பட்ஜெட்டில் படிப்படியாக குறைக்கப்பட்டு மக்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை . எனவே என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போராட்டம். ஒன்றிய அரசு நிதி தராத பட்சத்திலும் மாநில அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் மூலமாக நிதி ஆதாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு தான் 100 சதவீதம் வழங்க வேண்டும்.  நிதி தராததால் மாநில அரசுக்கு நிதி சுமை ஏற்படுகிறது என்றும் நிதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று டி.ஆர் பாலு தெரிவித்துள்ளாா்.

தவெக தலைவர் விஜய், திமுக குறித்து முன் வைத்த கேள்விக்கு பதில் அளித்த டி ஆர் பாலு, நேற்று தொடங்கிய கட்சிக்கு எல்லாம் 64 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் நான் எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், 4000 கோடி என்னாச்சு என ஒன்றிய அரசுக்கு தங்களது கோரிக்கையை முன் வைக்கும் போது பாதகைகளை ஏந்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உட்பட திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றக்கூடிய பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பிடி உஷா- சேகர் பாபு விமா்சனம்

MUST READ