ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆந்திரா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து விஜயவாடாவில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக ஒருமனதோடு தேர்வு செய்யப்பட்டார். பவன் கல்யாண் முன்மொழிந்தார். அதனை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் வழிமொழிந்தனர்.
அதனை தொடர்ந்து, விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழாவில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு மலர் கொத்து வழங்கி, கட்டி தழுவி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு அமைச்சராக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்படுகிறார். சந்திரபாபு நாயுடு மகன் நர லோகேஷ் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார் (apcnewstamil.com)
தெலுங்கு தேசம் தனி பெரும்பான்மை பெற்ற போதிலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
விஜயவாடா புறநகர் பகுதியின் கண்ணாபுரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.