சந்திரபாபு நாயுடு வெற்றி ; ஜெகன் மோகன் ராஜினாமா
நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு வெற்றி முகத்தில் உள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா செய்கிறார்.
ஆந்திராவில் படுதோல்வி அடைந்ததால் இன்று மாலை 4 மணிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா செய்கிறார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க உள்ள நிலையில், ஜெகன்மோகன் ராஜினாமா செய்கிறார்.
ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில், 160 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
ஆந்திரா முதல்வராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9 ஆம் தேதி அமராவதியில் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்ததற்கு வாழ்த்துக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.