Homeசெய்திகள்இந்தியாசென்னை மெட்ரோ ரயில் திட்டம்; முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

-

- Advertisement -

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில் திட்ட சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்படி மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இந்த சூழலில், டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிக்கான மத்திய அரசின் நிதியை வழங்க கோரி மனு அளித்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் எழுதிய கடிதத்தில், “சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவீத பங்களிப்பு வழங்க வேண்டும்” என்று கோரினார். இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார துறையின் பரிந்துரைப்படி சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைஅமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம்2027-ம் ஆண்டில் நிறைவடையும். இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ