தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024 – 25-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. அதேபோல் முதல் முறையாக தமிழக அரசும் தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024 – 25-யை வெளியிட்டுள்ளது. நாளை தமிழ்நாடு அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
தமிழக சட்டப்பேரவையின் 2025ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 6ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025 – 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதியை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். அதன் தொடர்ச்சியாக வேளாண்மை பட்ஜெட்டும் வருகின்ற சனிக்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் ரூ என்ற எழுத்துடன் பட்ஜெட் குறித்த லோகோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சி உறுதி செய்திட என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நாளை வெளியாகவிருக்கும் தமிழக பட்ஜெட்டிற்கான லோகோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் முதன்முறையாக இந்த சமூகத்தின் அனைத்து தரப்பிடமும் பயன்பெறுகையில் தமிழ்நாட்டின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்ற அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கிறது.அனைத்து தரப்பின மக்களுக்கும் பொருளாதாரம் போய் சேரவும், தமிழ்நாட்டில் தொழில்முறையை மேம்படுத்தவும் பல்வேறு மாவட்டங்களில் இருக்கக்கூடிய குறிப்பாக தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை ஊக்கப்படுத்தவும், புதிய தொழிற்சாலைகள், தமிழ்நாடு அரசு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையிலே பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இத்தகைய தொழிற்சாலைகளை மேம்படுத்துவதாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்தை உறுதி செய்யும் விதமாக தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் லோகோ வெளியிட்டு இருக்கிறார்.