Homeசெய்திகள்அரசியல்திருப்பி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்! அதிர்ந்து நிற்கும் ஆளுநர் மாளிகை

திருப்பி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்! அதிர்ந்து நிற்கும் ஆளுநர் மாளிகை

-

- Advertisement -
kadalkanni
மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

அமைச்சர் செந்தில் பாலாஜியை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுழன்றடித்து வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பண மோசடி வழக்கு ஒரு பக்கம் இருக்க டாஸ்மாக் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பண மோசடி செய்து விட்டதாக எழுந்த குற்றச்சாட்டும், செந்தில் பாலாஜியின் தம்பி மனைவி பெயரில் அரண்மனை போன்று உருவாகும் பங்களா எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், செ.பாலாஜியின் பினாமிகள் 40க்கும் மேற்பட்டோர் வீடுகளில் வருமான வரித்துதுறையினர் ரெய்டு நடத்தியும் கூட அவரை ஏன் லாகா மாற்றம் செய்யவில்லை? அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை? என்ற கேள்விகள் எழுந்தன.

தங்கம் தென்னரசு

நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோ விவாகரத்தில் சிக்கியதுமே அவரை இலாகா மாற்றம் செய்த முதல்வர் ஸ்டாலின், இத்தனை பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் செந்தில் பாலாஜியை ஏன் பதவியில் இருந்து நீக்கவில்லை? அமைச்சர் பதவி அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை? இலாகா மாற்றம் கூட ஏன் செய்யவில்லை? என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு பின்னர் செந்தில் பாலாஜி வசம் இருந்த இலாகாக்களை இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்க முன் வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்க முடிவெடுத்து இருக்கிறார். செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சார துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்க முடிவு எடுத்து இருக்கிறார் முதல்வர். அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த இரண்டு இலாகாக்களை வேறு அமைத்து இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் அவங்க செந்தில் பாலாஜி இலாஹா இல்லாத அமைச்சராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த இரண்டு துறைகளை இரண்டு அமைச்சர்களுக்கு ஒப்படைப்பதற்காக ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் என்ன காரணத்திற்காக இலாகா மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்காததால் ஆளுநர் அந்த பரிந்துரையை திருப்பி அனுப்பி இருக்கிறார். இது தமிழக அரசியலில் பெரிதாக வெடித்திருக்கிறது .

இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடி போக்கு. அமைச்சர்கள் யார் யார் அவர்களுக்கு என்னென்ன துறைகள் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உள்ளது . ஆளுநர் இதில் தலையிடுவதும் விவரிசிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ராஜ் பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்று ஆவேசப்பட்டு இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் .

’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்
mk stalin thiruma

முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக இருக்கிறது. ஆளுநர் அந்த செயலை தவிர்த்து இருக்க வேண்டும் என்று சொல்லும் சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது . சட்டமும் அதைத்தான் சொல்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது . அவருக்கு உடல்நிலை சரியில்லை . அதனால் இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின் படி நீதிமன்ற காவல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என எந்த சட்டத்திலும் இடமில்லை. தண்டனை பெற்றால் மட்டும் தான் பதவியில் இருக்கக் கூடாது என்று வெடித்திருக்கிறார்.

rn ravi mkstalin

அமைச்சர்களை நியமிப்பதிலும் நீக்குவதிலும் எப்படி முதல்வரின் பரிந்துரைப்படி ஆளுநர் செயல்பட வேண்டுமோ அதே போன்று தான் இலாகா மாற்றுவதிலும் செயல்பட வேண்டும் . ஒரு அமைச்சரின் இலாகா ஏன் முதலமைச்சர் மாற்றுகிறார் என்று காரணம் கேட்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சட்டப்படி உரிமையும் இல்லை . அமைச்சர் ஒருவர் விசாரணையை சந்திப்பது அவரது அமைச்சர் பொறுப்புகளை பொறுப்புக்கான தகுதியை எந்த வகையிலும் பாதிக்காது என்கிற நிலையில் ஆளுநர் அதனை சுட்டிக்காட்டி இருப்பது தேவையற்றது என்கிறது தமிழக அரசு. ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், திருப்பி அனுப்பி விட்டதால் திருப்பி அடிக்க முடிவெடுத்து விட்டார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது குறித்து விரைவில் அரசாணை வெளியாகும் என்று தகவல் பரவுகிறது. இலாகா மாற்றம் தொடர்பாக முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டதால் தமிழக அரசே அரசாணை வெளியிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ந்து போய் நிற்கிறது ஆளுநர் மாளிகை.

MUST READ