தொழில்த்துறை வளர்ச்சி மற்றும் தமிழக முன்னேற்றத்திற்கு மாவட்டம் தோறும் மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வரும் முதல்வர் மக்களுக்கான முதல்வராக செயல்பட்டு வருகிறார். மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சி என்பது அனைத்துத்துறைகளின் வளர்ச்சியாக உள்ளது. மாநில வளர்ச்சிக்கு முதல்வரின் அரவணைப்போடு கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என கரூரில் நடைபெற்ற 71-வது அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்…
கரூரில், நடைபெற்ற 71 -வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 3558 பயனாளிகளுக்கு ரூ. 37.01 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார்.விழாவில் கலந்து கொண்ட தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,
கரூரில், இன்று நடைபெறும் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழாவில், 3558 உறுப்பினர்களுக்கு ரூ.37.01 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பயிர் கடனுதவியாக 1754 உறுப்பினர்களுக்கு 19.93 கோடியும், கால்நடை பராமரிப்பு கடனுக்காக 598 பயனாளிகளுக்கு ரூ 5.74 கோடி மதிப்பிலும், மத்திய கால கடன் உதவியாக 346 பயனாளிகளுக்கு 3.50 கோடி மதிப்பிலும், சுய உதவி குழு கடனுக்காக குழுவில் உள்ள 747 உறுப்பினர்களுக்கு 5.94 கோடி நிதியும், டாப்சிட்கோ திட்டத்தில் 4 உறுப்பினர்களுக்கு நான்கு லட்சமும், இதர கடனாக 28 உறுப்பினர்களுக்கு 1.22 கோடியும்,
டாம்கோ திட்டத்தில் 81 உறுப்பினர்களுக்கு 0.64 லட்சம் நிதி என மொத்தம் 3558 உறுப்பினர்களுக்கு ரூ 37.01 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் உள்ள 84 சங்கங்களில் 9 சங்கங்களில் மட்டுமே 5 கோடிக்கு மேல் கடன் வழங்கி இருந்தனர். நமது ஆட்சியில் கரூரில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் 6 கோடிக்கு மேல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஒர் ஆண்டில் 52 ஆயிரம் பேர்களுக்கு ரூ. 558 கோடி கடனுதவி வழங்கப்பட்து. தற்போது நமது ஆட்சியில் 2022- 23 ஆண்டில் மட்டும் 1.30 லட்சம் பேருக்கு 1066 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியை ஒப்பிடும் போது இரண்டு மடங்கு வளர்ச்சி உயர்ந்துள்ளது.
முதல்வரின் எண்ணம், சிந்தனை எல்லாம் தினசரி 24 மணி நேரத்தில் 20 நேரம் மக்களின் வளர்ச்சி முன்னேறத்தை பற்றியே உள்ளது. மக்களுக்காக அயராது உழைக்கும் முதல்வரை நாம் பெற்றிருக்கிறோம். தமிழ்நாட்டில் தொழில் துறை முன்னேற்றத்திற்கு முதல்வர் முக்கியத்தும் அளித்து வருகிறார். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டை ஈட்டி தமிழகத்தில் தொழில் தொடங்க அனைத்து திட்டங்களையும் செய்து வருகிறார். மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, கரூரில்
200 ஏக்கர் நில பரப்பில் சிப்காட் அமைத்து தொழில் துறையை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கரூரில் உள்ள படித்த இளைஞர்கள் உள்ளூரிலேயே வேலை கிடைத்திடும் வகையில் டைட்டல் பார்க்க அமைக்க திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான உத்தரவை முதல்வர் அறிவிக்க உள்ளார்.
தமிழக மக்கள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை முதல்வரே தொடங்கி வைத்து, பணியை ஆய்வு செய்து, பணி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களுக்கான முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மாவட்டம் தோறும் மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வரும் முதல்வர் மக்களுக்கான முதல்வராக செயல்பட்டு வருகிறார். மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சி என்பது அனைத்துத்துறைகளின் வளர்ச்சியாக உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.
திமுக வியூகம்: புஹாஹா… அதிபர் சத்தமாக சிரிப்பாராம்- சீமானின் நிலைமை சொன்ன சாட்டை