இந்திய கூட்டணியில் யாா் தலைமை ஏற்று வழிநடத்துவது என்ற சர்ச்சை மீண்டும் ஏழுந்து. இது குறித்து தனியார் யுடியுப் செனல் ஒன்றில் ஓய்வு பெற்ற அதிகாரி பாலசந்தர் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளாா். பாஜகவை ஆட்சியில் இருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முழக்கமாக கொண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியே இந்திய கூட்டணி. 26 கட்சிகளும் ஒன்றினைந்து இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கி இந்த கூட்டணி உருவானது.
இந்திய கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களான ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது . அதனால் அந்த கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு மேலும் காங்கிரஸ் தலைமையை பின்பற்றினால் தொடர்ந்து தோல்வியை தான் சந்திக நேரிடும் என்று கூட்டணியை ஆதரித்து வந்த சில கட்சிகள் மாற்றுக்கருத்தை தெரிவித்தனா்.
இந்நிலையில் பாஜக வை எதிர்க்க தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார் இந்திய கூட்டணியை தலைமை ஏற்பதாக அறிவித்தாா், பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் இந்திய கூட்டணியை தலைமை ஏற்று வழிநடத்த விருப்பம் தெரிவித்ததை அடுத்து மம்தாவிற்கு இந்திய கூட்டணியில் உள்ள பல கட்சிகள் ஆதரவு தெவித்து வருகின்றனா்.
மம்தா தலைமை ஏற்றால் காங்கிரசை எப்படி நடத்துவார்? அதேபொன்று மேற்கு வங்கத்தில் சிபிஎம் என்ற இடதுசாரி கட்சியை எப்படி நடத்துவார் என்ற கேள்விகளும் எழுகின்றது. மேற்கு வங்களத்தில் சிபிஎம் யும், காங்கிரஸையும் ஒழித்து கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர் , தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதால் மட்டுமே இந்திய கூட்டணியை தலைமை பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்ற கருத்தும் வருகின்றன.
காங்கிரஸையும் ,சிபிஎம்யும் ஒழித்துகட்டும் எண்ணத்தோடு செயல்பட்டதால் மேற்கு வங்காளத்தில் பாஜக நேரம் பார்த்து உள்ளே நுழைந்ததை யாராலும் மறுக்க முடியாது. தற்போது மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவியதால் சரத்பவர் அதிருப்தி அடைந்தாா். அவா் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ,அனைவரையும் அனுசரித்து போக கூடிய குணம் கொண்ட தலைவா்.
கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வலுவாக உள்ளதை போல் மற்ற மாநிலங்களிலும் நம்பிக்கையுள்ள இளம் தலைவர்களை காங்கிரஸ் உருவாக்க வேண்டும். எல்லா சாதிகளையும் அனுசரித்து, நாடு அனைவருக்கும் சொந்தமானது, நாட்டு மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற பொதுவுடமை எண்ணங்கள் கொண்ட தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பலம் பொருந்திய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் .அப்போழுது தான் அந்த கட்சி இந்திய கூட்டணியை தலைமை தாங்க முடியும். அதுவரை இந்திய கூட்டணியில் மம்தாவுக்கு ஆதரவு பெருகி கொண்டு தான் இருக்கும். முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட மற்ற மாநில தலைவர்கள், இந்திய கூட்டணியில் உள்ள தங்களின் கொள்கை குறித்து விழிப்போடு இருக்க வேண்டும் . ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு என்ற பாரதியார் கவிதையை போல் பாஜகவை எதிர்ப்பது மட்டுமே இல்லாமல் அதன் சூழ்ச்சியிலும் சிக்காமல் ஒட்டுமொத்தமாக பாஜகவை எதிர்க்கும் கொள்கையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி பாலசந்தர் கூறியுள்ளாா்.
பாஜகவை பகைத்துக் கொண்டால் அதோகதிதான்… வாலைச் சுருட்டிக் கொண்டு மொத்தமாக சரண்டரான ஏக்நாத்..!