Homeசெய்திகள்அரசியல்ராகுல்காந்தி பேசுவதை நிறுத்த மோடி சதி- நாராயணசாமி

ராகுல்காந்தி பேசுவதை நிறுத்த மோடி சதி- நாராயணசாமி

-

ராகுல்காந்தி பேசுவதை நிறுத்த மோடி சதி- நாராயணசாமி

ராகுல் காந்தி பேசுவதை நிறுத்த வேண்டும், தடுக்க வேண்டும் என்பதற்காக மோடியின் திட்டமிட்ட சதிதான் இந்த பொய் வழக்கு என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

President's rule in Puducherry murder of democracy: V Narayanasamy

ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கத்திற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாராயணசாமி செய்தியாளரிடம் பேசுகையில், “கர்நாடக மாநிலத்தில் 2019-ம் ஆண்டு ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசும்போது நீரவ் மோடி, லலித்மோடி போன்றவர்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளில் வாங்கி அதை செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். அதற்கு நரேந்திரமோடி துணையாக இருக்கிறார் என்று சொன்னதற்கு மோடி சமுதாயத்தையே ராகுல் காந்தி உதாசினப்படுத்திவிட்டார், அவமதித்துவிட்டார் என்று அந்த வழக்கு போடப்பட்டது. இது ஒரு பொய் வழக்கு.

Rahul speaking for 15 mins is a big thing': PM Modi hits back at Cong  leader's dare | The News Minute

ராகுல்காந்தி மோடி சமுதாயத்தை விமர்சித்து எதுவும் பேசவில்லை என்பதை அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை. நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி, நரேந்திர மோடியை எதிர்த்து நீங்கள் பிரதமராக இருந்து அதானியை பனிரெண்டரை லட்சம் கோடிக்கு அதிபராக்கி இருக்கிறீர்கள், பொதுத்துறை நிறுவனங்களை அவருக்கு வழங்கி இருக்கிறீர்கள். பல ஆயிரம் கோடி பங்குகளை அவர் அடமானம் வைத்து எல்ஐசி, தேசிய வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார். அது திவாலாகி அவரது பங்கு சந்தை சரிந்துவிட்டது. அதுமட்டுமின்றி அவரது அண்ணன் வினோததானி மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நிறுவனங்களை ஆரம்பித்து இந்தியாவில் இருந்து பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

இது சம்மந்தமாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டார். ராகுல் காந்தி பேசுவதை நிறுத்த வேண்டும், தடுக்க வேண்டும் என்பதற்காக மோடியின் திட்டமிட்ட சதிதான் இந்த பொய் வழக்கு. நாங்கள் இதனை இரண்டு விதங்களில் சந்திப்போம். ஒன்று சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அரசியல் ரீதியாக தெருவில் இறங்கி போராடுவோம். ராகுல் காந்தியின் ஜனநாயக உரிமை பறிப்பது மட்டுமல்லாமல், நாட்டு மக்களின் பேச்சுரிமை பறிக்கின்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதை எதிர்த்து பலக்கட்ட போராட்டங்களை நடத்த காங்கிரஸ் தலைமை கட்டளையிட்டுள்ளது” என்றார்.

MUST READ