Homeசெய்திகள்அரசியல்சென்னையில் அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

-

சென்னையில்  அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலையின் புகைப்படம் கிழித்து ஏறியப்பட்டதால் பரபரப்பு… தடுக்கமுயன்ற போலீஸாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகையை சரித்திர பதிவேடு குற்றவாளி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த கு.செல்வப் பெருந்தகை, என் மீது எந்த காவல் நிலையத்தில் என்னென்ன வழக்குகள் இருக்கிறது என்பதை அண்ணாமலை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகையை இழிவுபடுத்தியதாக கூறி சென்னை முழுவதும் காங்கிரசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜிம்பாவே அணிக்கு 183 ரன்கள் இலக்கு!

அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கே.வி திலகர் தலைமையில், தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை நொளம்பூர் 20A பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படங்களை காங்கிரசார் கிழித்து ஏறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அதனை தடுக்க முயன்றதால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய காங்கிரசார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

MUST READ