Homeசெய்திகள்அரசியல்சி.வி.சண்முகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு - தீர்ப்பு என்ன?

சி.வி.சண்முகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு – தீர்ப்பு என்ன?

-

சி.வி.சண்முகம் முதல்வர் குறித்து அவதூறு பேச்சு- தீர்ப்பு என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் எனவும், அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி. சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

திண்டிவனம் மற்றும் விழுப்புரம் நகர காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டதன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டுமெனவும், ஆனால் திமுக நிர்வாகியால் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் எனவும், அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறிய நீதிபதி, ஆனால் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது கரூர் வழக்கறிஞர் புகார்

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறினார். வேறு பிரிவு ஏதேனும் பொருந்தும் என்றால் அந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்வதாக கூறினார்.

இதேபோல, அனுமதியின்றி போரட்டம் நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்கு பேர் புகார் அளித்ததாகவும், இவற்றில் ஒரு புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது மற்றும் போராட்டம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

MUST READ