Homeசெய்திகள்அரசியல்‘முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்... இல்லையேல் கொன்றுவிடுவேன்’: பகிரங்க மிரட்டல்

‘முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்… இல்லையேல் கொன்றுவிடுவேன்’: பகிரங்க மிரட்டல்

-

மும்பையில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த மாதம் 12ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததால் சித்திக்கை, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் மட்டுமின்றி அவரது தம்பி அன்மோல் பிஷ்னோய்க்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.chennai gun shooting

இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பதவியை 10 நாட்களுக்குள் ராஜினாமா செய்யாவிட்டால், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதைப்போல கொலை செய்யப்படுவார் என என மும்பை காவல்துறைக்கு மிரட்டல் வந்துள்ளது.

மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தெரியாத எண்ணில் இருந்து இந்த மிரட்டல் வந்துள்ளது. இதனை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இன்னும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து தொடர்ந்து முதலமைச்சரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 12 ஆம் தேதி பாபா சித்திக் அவரது மகன் ஜீஷான் சித்திக் அலுவலகத்திற்கு வெளியே மூன்று நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக அக்டோபர் 30 ​ம் தேதி ​ஒரு நபர் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ரூ.2 கோடி மீட்கும் தொகை கேட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த மிரட்டல் வந்துள்ளது. அந்த நபர் மும்பையின் பாந்த்ரா கிழக்கைச் சேர்ந்த ஆசம் முகமது முஸ்தபா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேபோல், சல்மான் கான் மற்றும் பாபா சித்திக்கின் மகன், பாந்த்ரா கிழக்கு என்சிபி எம்எல்ஏ ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்த 20 வயது இளைஞன் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) நொய்டாவில் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட முகமது தயாப், ஜீஷன் சித்திக் மற்றும் சல்மான் கானிடமும் பணம் கேட்டுள்ளார்.

MUST READ