டெல்லி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லியின் 8து முதலமைச்சராக பதவியேற்று கொண்டார் அதிஷி.
டெல்லியின் 8வது முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அதிஷி சிஸ் இன்று பதவியேற்று கொண்டார். இவர் 3வது பெண் முதல்வர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் வி.கே சக்சேனா அதிஷிக்கு முதலமைச்சராக பதவியேற்பு மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். டெல்லி சட்டமன்ற வரலாற்றில் டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்ற மூன்றாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையை அதிஷி பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு 1998-2013 வரை சுமார் 15 வருடங்கள் டெல்லியின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா திக்ஷித் இருந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் 1998ம் ஆண்டு 52 நாட்கள் டெல்லியின் முதலமைச்சராக இருந்துள்ளார். அந்த வரிசையில் டெல்லி சட்டமன்றத்திற்கு 2025 மார்ச் மாதம் பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் வரை இன்று முதல் அதிஷி முதலமைச்சராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியின் புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் , முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.