Homeசெய்திகள்அரசியல்மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்க கூடாது! கருணாநிதி அரசு நிறுத்தியதை ஸ்டாலின் அரசு முடிக்க கோரிக்கை

மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்க கூடாது! கருணாநிதி அரசு நிறுத்தியதை ஸ்டாலின் அரசு முடிக்க கோரிக்கை

-

- Advertisement -

stalin

மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்காமல் கண்ணகி விழாவை மூன்று நாட்கள் நடத்த வேண்டும் என்று தெய்வத்தமிழ் பேரவை முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது .

சித்திரை முழு நிலவு கண்ணகி விழாவை மூன்று நாள் விழாவாக கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெய்வத்தமிழ் பேரவையின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ . மணியரசன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆண்டுதோறும் சித்திரை முழு நிலவென்று தேனி மாவட்டம் மங்களதேவி கண்ணகி பெருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த பெருவிழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழர்கள் தாராளமாக பங்கேற்று முழு மகிழ்ச்சியோடு பங்கேற்பதை கேரளா ஆட்சியாளர்கள் விரும்புவதே இல்லை. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தாலும் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி அங்கே நடந்தாலும் தமிழர்களுக்கு எதிரான இந்த அவலம் தொடர்கிறது என்கிறார்.

temple

கேரளத்தில் கெடுபிடிகளுக்கு இடையே ஆண்டுக்கு ஆண்டு தமிழர்கள் இந்த பெருவிழாவில் அதிகம் பங்கேற்று வருக்கிறார்கள் . கண்ணகி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை குமிழியிலிருந்து கேரள வனப்பகுதியில் 13 கிலோமீட்டர் உள்ளது. கேரள ஜீப்புகளில் பயணம் செய்துதான் கண்ணகி கோவிலுக்கு செல்ல வேண்டும். கேரளா அரசின் வனத்துறையில் அப்பகுதி உள்ளது. வனத்துறையை காரணம் காட்டி கேரளா ஆட்சியாளர்கள் கண்ணகி கோவிலுக்கு எதிராக பல கெடுபிடிகளை செய்து வருகின்றார்கள் .

கண்ணகி கோவிலுக்கு செல்ல தமிழ்நாட்டில் எல்லைக்கு உள்ளேயே வழி இருக்கிறது. அதற்கு ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள தார் சாலை அமைக்க வேண்டும். அதைச் செய்தால் தமிழ்நாட்டில் எல்லைக்கு உள்ளேயே பக்தர்கள் கோயிலுக்கு சென்று விட முடியும். கண்ணகி கோயில் தமிழ்நாட்டில் எல்லைக்குள் தான் இருக்கிறது. 96ல் திமுக ஆட்சியில் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்குடிமகன் இதற்கு தார் சாலை அமைக்க தொடங்கினார். கேரளா அரசு எதிர்ப்பு தெரிவித்ததும் திமுக அரசு அப்போது கைவிட்டு விட்டது. ஆனால் தற்போது மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்க கூடாது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கண்ணகி விழாவை மாலை 5 மணி வரைக்கும் மக்கள் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் .

அடுத்த ஆண்டு முதல் கண்ணகி திருவிழாவினை சித்திரை முழு நிலவுக்கு முதல் நாள், முழு நிலவு நாள், அடுத்த நாள் என்று மூன்று நாள் கொண்டாட வேண்டும். கேரளா அரசு மறுத்தால் பளியங்குடி பாதை வழியாக சென்று மூன்று நாள் விழாவில் மக்கள் பங்கேற்க தமிழக அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

MUST READ