Homeசெய்திகள்அரசியல்ஷிண்டே அரசின் அமைச்சர்களை கடாசிய ஃபட்னாவிஸ்... மஹாராஷ்டிராவில் தடாலடி மாற்றம்

ஷிண்டே அரசின் அமைச்சர்களை கடாசிய ஃபட்னாவிஸ்… மஹாராஷ்டிராவில் தடாலடி மாற்றம்

-

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசின் முதல் விரிவாக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த அரசில் பாஜகவின் 20 அமைச்சர்களும், சிவசேனாவின் 10 பேரும், என்சிபியின் 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழாவிற்கு பல எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு வந்துள்ளது.மகாராஷ்டிரா

முந்தைய ஷிண்டே அரசில் இருந்த பல சீனியர் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. என்சிபியின் சீனியர் அமைச்சர்களான திலீப் வல்சே பாட்டீல், சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே ஆகியோருக்கு அழைப்பு வரவில்லை. சுதிர் முனாங்திவார், ரவீந்திர சவான் ஆகியோருக்கு பாஜகவிடம் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை. ஷிண்டே சேனாவைச் சேர்ந்த தீபக் கேசர்கர், தானாஜி சாவந்த், அப்துல் சத்தார் ஆகியோருக்கும் அழைப்பு வரவில்லை. அதனால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.

என்சிபி மூத்த தலைவர் சகன் புஜ்பாலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் புஜ்பாலுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்ற பேச்சு அடிபடுகிறது. 2014 முதல் 2019 வரையிலான காலத்தைத் தவிர்த்து, பல ஆண்டுகளாக சகன் புஜ்பால் அமைச்சராக இருந்துள்ளார். புஜ்பால் துணை முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். நாசிக் மாவட்டத்தில் உள்ள 7 என்சிபி எம்எல்ஏக்களில் நரஹரி ஜிர்வால் மட்டுமே வந்துள்ளார்.

பாஜகவில் – தேவேந்திர ஃபட்னாவிஸ், கிரிஷ் மகாஜன், சந்திரகாந்த் பாட்டீல், பங்கஜா முண்டே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சந்திரசேகர் பவன்குலே, மங்கள்பிரபாத் லோதா, ஆஷிஷ் ஷெலர், ஜெயக்குமார் ராவல், நித்தேஷ் ரானே, சிவேந்திர சிங் போசலே, பங்கஜ் போயர் கணேஷ் நாயக், மேக்னா போர்டி , சஞ்சய் சவ்கரே, ஆகாஷ் ஃபண்ட்கர், அசோக் உய்கே ஜெயக்குமார் கோர் ஆகியோர் அமைச்சராகின்றனர்.

MUST READ