மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராக பாஜக தேவேந்திர பாட்னாவீஸ் பதவியேற்பு விழா நடைப்பெற்று கொண்டிருக்கிறது. மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பட்னவிஸ்சுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவார் பதவியேற்பு
மராட்டிய மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ஆளும் பாதிய ஜனதா கட்சி தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த நவம்பர் 26ம் தேதியுடன் மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கான பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் யார் என்பது குறித்தான முடிவை தேர்தல் முடிந்து 10-நாட்களாக தொடர்ந்து ஆலோசனைகள் நடந்தது.
பல முறை ஆலோசனைகள் நடத்திய பிறகும் முதலமைச்சர் யார் எந்த கட்சியை தேர்ந்தவர் என்பதா முடிவு எடுக்க முடியாமல் பாரதீய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் திணறின. இந்நிலையில் பாஜக மாநில தலைவரும் துணை முதலமைச்சருமான தேவேந்திர பாட்னாவீஸ் மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு மனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நேற்று மாலை மராட்டிய மாநிலம் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை, தேவேந்திர பாட்னாவீஸ்-ஏக்நாத் ஷிண்டே-அஜித்பவார் உள்ளிட்ட மூவரும் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள். கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இன்று மும்பையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா மாநில புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு