Homeசெய்திகள்அரசியல்மாவட்ட செயலாளர்களை மாற்றத் திட்டம் - எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி

மாவட்ட செயலாளர்களை மாற்றத் திட்டம் – எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி

-

- Advertisement -

அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை மாற்றத் திட்டம் – எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி

அதிமுகவில் உள்ள சில மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு புதிய நபர்களை நியமனம் செய்ய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

EPS

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையில் இருந்து வந்த மோதல் படிப்படியாக முடிவிற்கு வந்துவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக அரசும் ஓபிஎஸ்-ஐ ஓரம் கட்டிவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அனைத்து அமைப்புகளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

OPS

இந்நிலையில் அடுத்து என்ன செய்யவதென்று தெரியாமல் ஓபிஎஸ் தரப்பு புலம்பி வருகிறது. அதேவேளையில் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜகவுடன் கூட்டணியை உறுதிப் படுத்திவிட்டு உற்சாகமாக திரும்பியுள்ளார்.

EPS AMITSHAH

இப்படி அடுத்தடுத்து சுறுசுறுப்பாக இயங்கிவரும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்தது கட்சி உறுப்பினர் சேர்க்கையில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். மண்டலம் வாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்து உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

அப்போது புகாருக்குறிய மாவட்ட செயலாளர்கள், உத்தரவுகளை அலட்சியப் படுத்தும் மாவட்ட செயலாளர்கள், கட்சியினரை அனுசரித்து செல்லாமல் சர்வதிகாரப் போக்கில் செயல்படும் மாவட்ட செயலாளர்களை பதவி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.

அந்தப் பட்டியலில் அம்பத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், தற்போதைய திருவள்ளுர் தெற்கு மாவட்ட செயலாளர் அலேக்சாண்டர் மீது ஏராளமான புகார்கள் எடப்பாடியார் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

Alexander

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர், ஆவடி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு   அலேக்சாண்டர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அம்பத்தூரில் அதிமுக பகுதி செயலாளர் அய்யனார், முன்னாள் நகர்மன்ற தலைவர் ருக்மாங்தன் மற்றும் சில முக்கிய நிர்வாகிகள், கட்சியினரை மதிக்காமல் சர்வதிகாரப் போக்கில் செயல்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ள்து. அம்பத்தூர் அதிமுகவில் தனித்தனி கோஷ்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேபோன்று ஆவடியில் முன்னாள் அமைச்சர் அப்துல்ரஹீம் தலைமையில் ஒரு கோஷ்டியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

Rahim

அம்பத்தூர், ஆவடி தொகுதிகளில் அதிமுக சார்பில் எந்த பகுதியில், யார் செலவு செய்து கூட்டம் நடத்தினாலும் “தலைமை அலேக்சாண்டர்” பெயர்தான் போடவேண்டும் என்று கட்சியினரிடம் உத்தரவு போட்டுள்ளார். மேலும் நோட்டீஸ் கடைசியில் “நிகழ்ச்சி ஏற்பாடு என்பதிலும் அலேக்சாண்டர் பெயர் இருக்க வேண்டும் என்று அடம்பிடிப்பதாக அதிமுகவினர் புலம்புகின்றனர்.

ஒரு பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்து வதற்கும் லட்சக் கணக்கில் செலவாகிறது. அவ்வளவு ரூபாய் செலவு செய்யும் கட்சி நிர்வாகியின் பெயரை நோட்டீசில் போடாமல் மாவட்ட செயலாளர் அலேக்சாண்டர் பெயரை போட்டு அவர் மட்டும் பெயர் வாங்கி கொள்வதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து அம்பத்தூரை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத அதிமுக நிர்வாகி ஒருவர் பேசும்போது, தற்போது திமுக அரசு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்துக் கொண்டிருக்கிறது. அதனை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தலாம் என்று மாவட்ட செயலாளரிடம் கேட்டால், நடத்தலாம் என்கிறார். ஆனால் ஆர்ப்பாட்டத்தின் தலைமை அவர் பெயரைதான் போட வேண்டும் என்கிறார்.

பகுதி செயலாளர், மற்ற நிர்வாகிகள் யாருடைய பெயரையும் போடக்கூடாது என்று உத்தரவை போடுகிறார். செலவு செய்வது நாங்கள், பெயர் வாங்கிக் கொள்வது அவரா? என்று வேதனைப் படுகிறார். அதனால் ஆளும் கட்சியை கண்டித்து ஒரு கூட்டமும் நடத்த முடியாமல் இருப்பதாக தெரிவித்தார்.

Benjamin

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அலேக்சாண்டரின் அடாவடி செயலை முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, பெஞ்சமின் வாயிலாக தலைமையிடம் புகார் தெரிவித்துள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

VMoorthy

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தியிடம் கேட்டபோது, சாதாரண சிறிய கட்சியிலேயே ஆயிரம் கோஷ்டிகள், சண்டைகள் இருக்கிறது. தமிழகத்திலேயே பெரிய கட்சியில் கோஷ்டி இருக்காதா? அனைத்தும் எங்கள் பொது செயலாளர் அண்ணன் எடப்பாடியாருக்கு தெரியும். அவர் பார்த்துக் கொள்வார் என்று சிம்பிலாக முடித்துக் கொண்டார்.

MUST READ