அதிமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உலகநாதபுரத்தில் அமைந்துள்ள தனியார் மஹாலில் ராமநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
கள ஆய்வு நிகழ்வில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், செம்மலை ஆகியோர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது அதிமுகவினர் கூட்டம் கூட்டமாக வெளியேறி சென்றனர் அதேபோல் உணவு கூடத்தில் அதிமுகவினர் சாப்பாட்டிற்கு ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தனர்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில்…
கள ஆய்வில் சலசலப்பு என்பது மிகைப்படுத்தப்பட்டது. கட்சிப் பணி செய்வதில் போட்டி தான் ஏற்பட்டது. பேசுவதற்கு வாய்ப்பு தாமதமானதால் பொறுமை இல்லாமல் கட்சியினர் பேசுகின்றனர். கட்சி பணியாற்ற அவ்வளவு ஆர்வத்தோடு உள்ளனர். கட்சி வலிமையாக உள்ளது என அர்த்தம், இதில் எந்த ஒரு பின்னடைவும் இல்லை.
கூட்டணி விவகாரங்கள் குறித்து தலைமை முடிவெடுத்துக் கொள்ளும், தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேச வேண்டும் அதுவரை பேசக்கூடாது என பொதுச் செயலாளர் கூறியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒன்றை ஆண்டுகள் உள்ளது. தலைமை கழகம் எடுக்கும் முடிவை கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வார்கள்.
திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம், திமுக கூட்டணியில் இருப்பவர்கள் நாங்கள் இல்லாமல் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என கேள்வி எழுப்புகின்றனர். சட்டப்பேரவை தேர்தல் வரை திமுக கூட்டணி நீடிக்குமா அல்லது சிதறுமா என்பது சிறிது நாட்களில் தெரியும். பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவுமில்லை என பொதுச் செயலாளர் கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒரு முறை இல்லை, 100 முறை எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணியா என கேள்வி எழுப்பினால் பொதுச் செயலாளர் வருத்தப்படுகிறார்.
தமிழக முதல்வர் பாமக தலைவரை மட்டும் அவதூறாக பேசவில்லை, திமுகவின் குடும்பமே அவதூறு பரப்புகின்றனர். அனைவரையும் தரக்குறைவாக, அவமானமாக பேசக் கூடியவர்கள் தான் திமுகவினர். ஸ்டாலின் மட்டுமல்ல திமுகவினர் அனைவருமே தரைக்குறைவாக பேசுபவர்கள், அவர்களுக்கு ஈடு இணை யாருமே இல்லை எனக் கூறினார்.
அதானி ஊழல் பிரச்சினையில் மருத்துவர் ராமதாஸ் திசை திருப்ப முனைகிறார் – வைகோ