Homeசெய்திகள்அரசியல்விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு

-

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பதை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு

விக்ரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவித்திருந்தனர். மக்களவை தேர்தலுடன் விக்ரவாண்டி தொகுதி இடைத் தேர்தலையும் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனோ அப்பொழுது தள்ளிப்போனது. 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலும் விளவங்கோடு சட்டப்பேரவை இடத்தேர்தலும் நடத்தப்பட்டது. நடந்த அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் ஜூலை 10 ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் ஜூன் 14ம் தேதி முதல் 21 தேதி வரை பெறப்படும் என்று அறிவித்துள்ளது. தேர்தலுக்கான கால அவகாசம் மிகக் குறைந்த அளவில் இருப்பதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் ஆலோசனை என்றும் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்றும் விவாதித்து வருகின்றனர்.

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு

அந்த வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலையத்தில் வேட்பாளர் தேர்வு செய்வதில் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா என்பவரை வேட்பாளராகப் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடைய வெற்றிக்கு கூட்டணி கட்சியினர் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

MUST READ