- Advertisement -
திமுக இஸ்லாமிய சமூக நட்பை பிரிக்க முடியாது – மு.க.ஸ்டாலின்
திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின், சமூக நீதி கோட்பாடு தான் இந்திய யூனியன் முஸ்லீமின் பவள விழாவிற்கு நான் வர காரணமாக உள்ளது என தெரிவித்தார்.
மிலாதுநபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர் என தெரிவித்த முதலமைச்சர், அதை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்ததாக கூறினார். ஆனால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டவர் கலைஞர் என கூறினார்.