Homeசெய்திகள்அரசியல்திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றி

திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றி

-

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றி பெற்றுள்ளனா்.18 ஆவது மக்களவைத் தேர்தல்  ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது இதனை அடுத்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது.

தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக கட்சி சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவமணி வேலு, தாமாக கட்சி சார்பில் விஜய சீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவீனா ருத் ஜேன் போட்டியிட்டனர்.

திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றிதிமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்

தென்காசி மக்களவைத் தொகுதி:

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் அவர்களும், அதிமுக சார்பில் கிருஷ்ணசாமி ,பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜான் பாண்டியன்,நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணன் தேர்தலில் பங்கேற்றனர்.

திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றிஇதில்  திமுக கட்சி சார்பில் பேட்டியிட்ட ராணி ஸ்ரீ குமார் 4,25,679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

தேனி மக்களவைத் தொகுதி:

தேனியில் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன்,அமாமுகா கட்சி சார்பில் தினகரன்,அதிமுக கட்சி சார்பில் நாராயணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் போட்டியிட்டனர்.

திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றிஇதில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் 5,71,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

MUST READ