Homeசெய்திகள்அரசியல்அதிமுக ஆட்சியில் செய்த தவறை திமுக செய்யவில்லை- எடப்பாடியாருக்கு சேகர் பாபு பதலடி

அதிமுக ஆட்சியில் செய்த தவறை திமுக செய்யவில்லை- எடப்பாடியாருக்கு சேகர் பாபு பதலடி

-

அதிமுக ஆட்சியில் செய்த தவறை திமுக செய்யவில்லை- எடப்பாடியாருக்கு சேகர் பாபு பதலடி

கடந்த 2015 அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்து பல உயிர்களை பலி வாங்கியது போல் தற்போது நடைபெறவில்லை. உரிய அனுமதியோடு தான் சாத்தனூர் அணை திறக்கப்பட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி க்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளடி கொடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,” 50ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் 6 நாட்கள் போக்கு காட்டி கரையை கடந்தது.

வானிலை ஆய்வு மையம் தனியார் அமைப்பு கருத்துகளை உள்வாங்கி தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தார்கள். சென்னையில் 13செ.மீ அளவிற்கு மழை பெய்தாலே ஸ்தம்பித்தது ஆனால் இம்முறை சில மணி நேரங்களில் வடிந்தது என்றால் முதல்வர் நடவடிக்கைகள் தான் காரணமாகும்.

முதல்வர் ஆய்வு செல்லும் போது பொதுமக்களின் பாராட்டு மழையில் நனைந்தார்.
துணை முதல்வர் அவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு களத்தில் நின்று போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தார்.

2000கோடி நிவாரணம் ஒன்றிய அரசு வழங்கவேண்டுமென்றார்.தமிழகத்தை காக்கும் கடவுளாக இருக்கிறார் முதல்வர். சேலத்திற்கும் சென்னைக்கும் மட்டும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி தலைவர் சாத்தனூர் அணை திறப்பு குறித்து பேசுகிறார்..
அவர் கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டும்.

சென்னையில் நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து பல உயிர்கள் பலியானது. பல வீடுகள் சேமடைந்ததை அவர் நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.
முன் அறிவிப்போடு தான் சாத்தனூர் அணை திறக்கப்பட்டது.

பல உயிர்களை காப்பாற்றிய திராவிட மாடல் அரசிற்கு நன்றி தான் அவர் கூறியிருக்கவேண்டும். ஆனால் குறை சொல்கிறார். அண்டை மாநிலங்களும் பாராட்டும் அளவிற்கு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே அவருக்கு அக்கறை இருந்தால் அவர் ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி வழங்க கோரிக்கை வைக்கவேண்டும்.

விழுப்புரத்தில் பாமக கட்சியினை சார்ந்த மகளிர் அணியினர் வேண்டுமென்றே அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியுள்ளார்கள். இந்நிகழ்ச்சிக்கு பிறகும் அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பணிகளை மேற்க்கொண்டு வருகிறார்.

தமிழ்நாடு முதல்வர் அவர்கள் 50ஆண்டுகள் பொதுவாழ்வில் இருப்பவர் இது போன்ற இயற்கை பேரிடரை பார்த்தவர் முறையாக இழப்பீடுகளை கண்க்கிடக்கூடியவர் உரிய முறையில் வழங்குவார். சாத்தணூர் அணையை பொறுத்தவரை 5முறை நீர் திறக்கும் போதும் தண்டோரா மூலமாகவும் ஆட்சியர் மூலமாகவும் நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.

இதற்கான குறிப்புகளை கையில் வைத்துள்ளோம். சென்னையில் மழைக்கு ஒருமாதத்திற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தோம்.
தன்னார்வலர்கள் ஆயிரக்கணாக்கானோர், மரஅறுவை இயந்திரம், நீர் உறிஞ்சும் இயந்திரம் , படகுகளை நிறுத்தி வைத்திருந்தோம். இது தான் அரசின் நடவடிக்கைகள் உதாரணமாகும்.

பெஞ்சல் புயல் வழக்கமான புயல் போல் கரையை கடக்காமல் நின்ற இடத்திலேயே நீண்ட நேரம் நின்றது. அனைத்து மாவட்ட ஆட்சியர் இடத்திலும் காணொலி காட்சி வாயிலாக கூட்டங்களை நடத்தினார் முதல்வர். அதே போல் வானிலை ஆய்வு மையத்திலும் முறையாக தகவல் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது .
இதன் காரணமாக தான் நிலச்சரிவை தவிர்த்து பெரியளவில் உயிரிழப்புகள் இல்லை.

இயக்குனராக அவதாரம் எடுக்கும் நடிகர் சந்தானம்!

MUST READ