Homeசெய்திகள்அரசியல்பாஜக தலைவர்களைப் பற்றி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை... ஆ.ராசா-வால் கதிகலங்கிப்போன நாடாளுமன்றம்

பாஜக தலைவர்களைப் பற்றி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை… ஆ.ராசா-வால் கதிகலங்கிப்போன நாடாளுமன்றம்

-

மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று திமுக எம்பி ஆ.ராசா பேச்சால் கடும் அமளி ஏற்பட்டது. ஆளும் பாஜக கட்சித் தலைவர்களை ‘மோசமான கூறுகள்’ என்று அழைத்தார். இதற்கு பாஜக தலைவர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், எங்களை எப்படி ‘மோசமான கூறுகள்’ என்கிறார்கள்? ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறினார். இது குறித்து அப்போது கூட்டத்திற்கு தலைமை வகித்த ஜெகதாம்பிகா பால், ஆ.ராசாவின் பேச்சை அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்குவதாக கூறினார். ‘‘ஆர்.எஸ்.எஸ்-ஐ பாஜக தனது முன்னோர்களாகக் கருதுகிறது. நான் கேட்க விரும்புகிறேன், அரசியலமைப்பில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்களிப்பு என்ன?’’என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது குறித்து தேர்தலுக்கு முன்பே பாஜக கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் இதை நடக்க விடமாட்டோம்’’ எனத் தெரிவித்தார் ஆ.ராசா. இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரஹலாத் ஜோஷி, ‘‘நீங்கள் சொல்வதற்கான ஆதாரம் கொடுங்கள்’’ என்றார்.

மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று, மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இன்று சபையில் கருத்து தெரிவிக்கலாம். மக்களவையில் பிற்பகல் 2 மணியளவில் ராகுல் தனது கருத்தை முன்வைக்கிறார். இரண்டாவது நாளான இன்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தை, பார்லிமென்ட் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ துவக்கி வைத்தார். முதல் நாளை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

MUST READ