Homeசெய்திகள்அரசியல்மக்களவையில் திமுக எம்பிக்கள் தமிழில் பதவியேற்பு

மக்களவையில் திமுக எம்பிக்கள் தமிழில் பதவியேற்பு

-

பாராளுமன்ற கூட்டத்தொடர் நாள் 2

பாராளுமன்ற கூட்டத்தொடர் நாள் 2 : மக்களவையில் திமுக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றுது.

அதனை தொடர்ந்து, 18-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24 ஆம் தேதி  துவங்கியது. ஜூலை 3 ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும். இந்த கூட்டத் தொடரில் முதல் நாளான ஜூன் 24 ஆம் தேதி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த எம்.பி.பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தற்காலிக சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய மக்களவை கூட்டத்தொடரின் அவை விதிகளின்படி பிரதமர் மோடி முதலில் பதவியேற்றார். அவருக்கு பிறகு மத்திய அமைச்சர்கள் மற்றும் இணையமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றனர்.

களத்தில் மீண்டும் போர்வீரர்கள் – மஹுவா மொய்த்ரா

 

பாராளுமன்ற கூட்டத்தொடர் நாள் 2

மொத்தம் 543 எம்.பி-க்கள், அதில் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூன் 24 ஆம் தேதி 280 எம்பிக்கள் பதவியேற்றனர். இரண்டாவது நாளான ஜூன் 25 ஆம் தேதி 264 எம்.பி-க்கள் பதவியேற்றனர். அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியை சேர்ந்த 40 எம்பிக்கள் தமிழில் பதவி ஏற்று வருகின்றனர். டி ஆர் பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பதவி ஏற்றனர் என்பது குறிபிடத்தக்கது.

MUST READ