Homeசெய்திகள்அரசியல்ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் இருக்கும்வரை திமுகவுக்கு வெற்றிதான்: கலகலப்பூட்டிய மு.க.ஸ்டாலின்

ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் இருக்கும்வரை திமுகவுக்கு வெற்றிதான்: கலகலப்பூட்டிய மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் இருந்தால் போதும். நாம் பிரச்சாரம் செய்ய தேவை இல்லை. அவர்களே பிரச்சாரம் செய்து நமது ஆட்சியை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து தமிழ்நாட்டில் உட்கார வைத்து விடுவார்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. அப்போது, நிதி ஒதுக்காததற்கு கண்டனம் தெரிவித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை, தமிழ் முன்னோர்களை அவமானப்படுத்துவதையே வழக்கமாக வைத்துக் கொண்டு செயல்படுகிறார். புதுப்புது அர்த்தங்கள் எல்லாம் எடுத்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். கவுண்டமணி காமெடி ஒன்று வருமே… அவர் சொல்லுவது இங்கே முடியாது. வீட்டுக்கு போனால் தான் முடியும். அப்படிப்பட்ட கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அந்த ஆராய்ச்சிக்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சி தடுக்கிற வகையில் தமிழ்நாடு குறித்து தவறான எண்ணங்களை கெட்ட உள்நோக்கத்தோடு அவர் பேசிக் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் இருக்கிறது நிறைய தொழில் நிறுவனங்கள். வெளிமாநிலத்துக்கு செல்வதாக எந்த ஆதாரத்தோடு பேசுகிறார்? அப்படி போக வேண்டும் என்பதுதான் அவரது கெட்ட எண்ணமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை பாராட்டுகிறது. ஆனால் ஆளுநர் ரவியின் பாராட்டி எங்களுக்கு தேவையில்லை.

ஒரு மேடையில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை இல்லை என்று சொல்கிறார். அதே ஆளுநர் இன்னொரு மேடையில் பாதுகாப்பான நகரம் என்று சொல்கிறார். இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார். பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்று ஆளுநர் சொன்னதை இரண்டு நாட்களுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்கு, சென்னைக்கு வந்த ஒன்றிய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா அவர்களே மறுத்திருக்கிறார். சென்னையில் ஒரு வர்த்தக நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இதை குறிப்பிட்டார். சென்னை மாநகரம் இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்கிறது என்று அவர் பாராட்டி இருக்கிறார்.

திருவள்ளுவருக்கு மீண்டும் காவி சாயம் பூசும் ஆளுநர் 

சென்னையில் இருக்கிற ஐடி நிறுவனங்கள் 2 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி வருவாய் ஈட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 50,000 பொறியாளர்களை உருவாக்குகிறது. மெட்ரோவிலும் சிறப்பாக இருக்கிறது. நகர்ப்புற வளர்ச்சியில் இந்தியாவின் ரோல் மாடல் சென்னை. இதையெல்லாம் சொன்னது யார்? பாஜகவின் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா. ஆனால், இங்கே இருக்கக்கூடிய ஆளுநர் ரவி கெட்ட எண்ணத்தோடு பேசுகிறார். ஆண்டுக்கு ஒரு முறை சட்டமன்றத்திற்கு வருகிறார். மாநில அரசு தயார் படுத்தித் தரக்கூடிய உரையை படிப்பது தான் ஆளுநருக்கு இருக்கிற ஒரே வேலை. அதைக்கூட செய்யாமல் முரண்டு பிடிக்கிறார்.

முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் - அண்ணாமலை கண்டனம்

இரண்டு நாட்களுக்கு முன்னால் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஆளுநரின் செய்கையை கண்டித்து பேசி இருக்கிறார். ஒன்றிய அரசு தயாரித்து வழங்கிய உரையை குடியரசு தலைவர் இந்த அவையில் வாசிக்கிறார். அதேபோல மாநில சட்டமன்றங்களில் அந்தந்த மாநிலங்கள் வழங்கக்கூடிய உரையை ஆளுநர் வாசிப்பது நாட்டின் மரபு. குஜராத்தில் நான் முதலமைச்சராக இருந்தபோது அதாவது மோடி சொல்கிறார், எங்கள் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அன்றைக்கு ஒன்றியத்தில் காங்கிரஸ் இருந்த போதும் ஆளுநர் வாசித்தார். இதை பிரதமர் மோடி அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற உண்மையை பிரதமர் மோடி அவர்களே ஒப்புக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலே… நான் கேட்கிறேன் இதற்கு ஆளுநர் ரவி என்ன பதில் சொல்லப் போகிறார்.

சவாலான இந்த பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்..... முதல்வர் ஸ்டாலின்!

நீதிமன்றத்தில் இருக்கிறது அந்த பிரச்சனைகள் எல்லாம். இன்னும் ஒரு வாரத்திற்குள் வரும். ஏற்கனவே அவருடைய அட்டூழியங்களை, அநியாயங்களை உச்ச நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய நீதிபதிகள் கிழித்து கொண்டிருக்கிறார்கள். அவரால்தான் எங்களுக்கு வேகம் வருகிறது. 2026 இல்லை… திமுக ஆட்சி இருக்கும் வரை அவர் தான் இங்கு ஆளுநராக இருக்க வேண்டும். அப்போதுதான் அது நமக்கு வசதி. அடுத்து பிஜேபி தலைவர் அண்ணாமலை. அவரும் இதே பதவியில் இருக்க வேண்டும். இரண்டு பேர் இருந்தால் போதும். நாம பிரச்சாரம் செய்து தேவை இல்லை. அவர்களே பிரச்சாரம் செய்து நமது ஆட்சியை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து தமிழ்நாட்டில் உட்கார வைத்து விடுவார்கள்” எனப் பேசினார்.

MUST READ