2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு வெற்றி பெற்று 200-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்றும் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வடக்கு தெற்கு ஒன்றியங்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் உணவுத்துறை அமைச்சருமான அர. சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது, முதலமைச்சர் அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கின்றார்.வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு வெற்றி பெற்று தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்றி மீண்டும் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்பார் என்று பேசியுள்ளார்.
இதில் தொகுதி பார்வையாளர் மற்றும் கழக நிர்வாகிகள் வாக்கு சாவடி முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.