கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் திமுகவிற்க்கு நெருக்கடியை மீறி வெற்றி.
கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகிய இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு இடையே இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. ஜாதியை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதுஇந்த வெற்றியை தந்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்நாள் முழுவதும் கடமைபட்டு உள்ளது.
ஆர்.எஸ்.பாரதி பேட்டி
இதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது. இந்தியாவில் எந்த கட்சியும் பெறாத வெற்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெற்றுள்ளது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற அளவில் முழுமையான வெற்றியை பெற்றோம்.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எந்த அரசும் சந்திக்காத சவால்களை திமுக சந்தித்தது. கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய சோகம் நிகழ்ந்தது. மத்திய அமைச்சர்கள் உட்பட இந்திய அளவில் இப்பிரச்சினை பூதாகரமாக பேசப்பட்டது. இதனை வைத்து இடைத்தேர்தலின் வெற்றியை முடக்கிவிட வேண்டும் என்று மற்ற கட்சியினர் முயற்சித்தனர்.
சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. இதனை அரசியல் பிரச்சினையாக முயற்சித்தனர். இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு இடையே இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் மூன்று ஆண்டு ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சவால்களுக்கு மத்தியில் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. திமுகவிற்கு சோதனை வரும் போதெல்லாம் தொண்டர்கள் வெகுண்டெழுவார்கள்.
இடைத்தேர்தலில் ஜாதியை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். கால் வைத்த இடத்தில் எல்லாம் வெற்றியை தேடித்தந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி.
கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கட்சியினர், பத்திரிகைகள் என அனைவரும் திமுகவிற்க்கு நெருக்கடி கொடுத்தனர். இவற்றை அனைத்தையும் தாங்கிக் கொண்டு நாம் தற்பொழுது வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியை தந்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்நாள் முழுவதும் கடமைபட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.