Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்

-

- Advertisement -

தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதியான ப. சிதம்பரத்திடம் தனியார் தொலைகாட்சி நடத்திய நேர்காணலில் அவர் பேசியதாவது.

தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழ்நாட்டை பற்றி பல விமர்சனங்கள் முன்வைத்தாலும் பிரதமர் மோடி இந்த தேர்தலின் தொடக்கத்திலும் தமிழ்நாட்டிற்குவந்தார் அதே சமயம் தேர்தல் நிறைவடைந்த போதும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கார். இதற்கு ஏதாவது காரணம் இருக்குமா? அல்லது தமிழ்நாட்டின் மீது பிரதமருக்கு தனி பாசமா? என்ற கேள்விக்கு ப. சிதம்பரம் பதில் கூறியதாவது,

தமிழ்நாடு மீது அவருக்கு பாசம் எல்லாம் கிடையாது. தமிழ்நாடு மீது பாசம் இருந்திருந்தால் அவர் எதற்கு தமிழ் வளர்ச்சிக்கு சொற்ப கோடிகளை ஒதுக்குகிறார். சமஸ்கிருத வளர்ச்சிக்கும் ஹிந்தி வளர்ச்சிக்கும் பல நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கும் அவருக்கு தமிழ்நாடு மீது தனி பாசம் எதுவும் கிடையாது. அப்படி பாசம் இருந்திருந்தால் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து இருக்க வேண்டும். திருவள்ளுவருக்கு காவி உடை தரித்து அவருக்கு திருநீறு பூசி அவரை ஒரு சைவ இந்துவாக மாற்றிய ஆளுநரை மத்திய அரசு கண்டித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை.

தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்

பூரி ஜெகநாதர் ஆலய விவகாரத்தில் கூட சாவி தமிழ்நாட்டிற்கு கொண்டு சென்று விட்டார்கள் என்று எல்லாம் பிரதமர் பேசி இருந்தார். தமிழர்கனை திருடர்கள் என்று சொல்லி விட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு பிரதமர் எப்படி வந்திருக்கிறார் என்ற கேள்விக்கு ப. சிதம்பரம் பதில் கூறியதாவது,

பிரதமர் மோடி ஒவ்வொரு இடத்திற்கு ஒரு மாதிரியும் மாநிலத்திற்கு ஒரு மாதிரி பேசுவது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் செல்லும் மாநிலத்தில் எல்லாம் உங்கள் மாநிலத்தை தான்  இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ செய்வேன் என்று கூறுவது எவ்வாறு சாத்தியமாகும்? அவ்வாறு எத்தனை முதல் மாநிலங்களை உருவாக்க முடியும்? ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒரு தரவரிசை பட்டியல் இருக்கிறது. ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு என செல்லும் மாநிலங்களில் எல்லாம் உங்களை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஆக்குவேன் என்று பிரதமர் கூறுவது சாத்தியமற்றது. அது எப்படி முடியும்? உங்கள் மாநிலங்களுக்கு நாங்கள் கூடுதலாக உதவி செய்வோம் எல்லாரும் முன்னேற வேண்டும் என்று கூறினால் அதில் அர்த்தம் உண்டு. ஆனால் உங்களைத்தான் முதல் மாநிலமாக ஆக்குவேன் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் கிடையாது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்

தேர்தல் தொடங்கி 76 நாட்களில் ஏழு கட்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு நீங்களும் சென்றிருப்பீர்கள் பிரதமரை பார்த்திருக்கலாம். பிரதமர் 206 இடங்களில் பிரச்சாரம் செய்ததாக கூறுகிறார்கள். இந்த 76 நாட்களில் பெரிய பிரச்சினையாக எதை பார்க்கிறீர்கள். இதற்கு ப.சிதம்பரம் பதில்

ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு முன்னர் பிரதமர் பேசியதிலும் ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி பிறகு பேசியதிலும் தெளிவான வேறுபாடு இருக்கும். ஏப்ரல் 20 ஆம் தேதி வரைக்கும் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளைப் பற்றி பேசுகிறார். அது நியாயம். ஆனால் பிரதமர் தன்னுடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய தேர்தல் அறிக்கையை பற்றி எங்கும் பேசவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை பற்றி விமர்சனம் செய்கிறார். அதில் முஸ்லிம் லீக் சாயல் இருக்கு என்று அர்த்தமில்லாத விமர்சனங்களை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பற்றி ஒருவரியில் கூறி விட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட பிரச்சாரத்தில் பிரதமர் பேசுவதில்லை.

ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு பிறகு பிரதமரின் வியூகம் மாறிவிட்டது. பிற்காலத்தில் அவர் பேசியதை எல்லாம் அவரே திரும்பி தொலைக்காட்சியில் பார்த்தால் தான் தெரியும் எவ்வளவு அபத்தமாக பேசி இருக்கிறார் என்று. அவர் அதை பற்றி எல்லாம் கவலையே படமாட்டார் என்றும் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்

தொடர்ந்து அபத்தமாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை பறித்து விடுவார்கள். மேலும் தான் தொடங்கிய ஜன்தன் கணக்கு என்று கூறுகிறார். ஆனால் டாக்டர் சி.ரங்கராஜன் அவர்கள் ரிசர்வ் வங்கியுடைய கவர்னர் ஆக இருந்தபோது அந்த கணக்கை முதலில் தொடங்கினார். பல கோடி கணக்குகள் அதன் தொடர்ச்சியாக தொடங்கப்பட்டன. அதன் பின்தொடர்ச்சி தான் ஜன்தன் அக்கவுண்ட். ஜன்தன் அக்கவுண்டுகளை மூடிவிட்டு அதில் இருக்கும் பணத்தை எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பறிமுதல் செய்து விடும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து நான் தந்த மின்சார இணைப்புகளை எல்லாம் காங்கிரஸ் அரசு துண்டித்துவிடும், நான் தந்த தண்ணீர் சப்ளை நிறுத்திவிடுவார்கள் என்று பேசுவது ஒரு பிரதமர் பேசும் பேச்சா? என்று ப. சிதம்பரம் கேட்டுள்ளார். இது பிரதமருக்கு ஏற்பட்ட பயத்தின் வெளிப்பாட அல்லது எதன் வெளிப்பாட்டில்  இந்தப் பேச்சு எல்லாம் அவர் பேசுகிறார். பயமா இருக்கலாம் அல்லது திறமையாகவும் இருக்கலாம் ஆனால் ஒரு பிரதமர் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

MUST READ