இரட்டை இலை விவகாரத்தில் அ..தி.மு.க தொடர்பாக உரிமை வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அதில் முடிவு வரும் வரை ஈ.பி.எஸ் வசம் உள்ள கட்சி தொடர்பான அதிகாரங்கள், உரிமைகளை தேர்தல் ஆணையம் திரும்ப பெற வேண்டும் என ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 6/12/2021-ல் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோரை முதன்மை உறுப்பினர்கள் மூலம் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தேர்ந்தெடுத்ததே கட்சி அடிப்படை விதியின் படி சட்டப்பூர்வமானது.
ஒருமுறை முதன்மை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும், அதனை பொதுக்குழுவின் ஒரு சிறப்பு தீர்மானம் மூலம் கலைத்து விடவோ அல்லது செல்லாது என்று முடக்கி விடவோ முடியாது.
மேலும் கடந்தமுறை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமையின் பதவி காலம் 2026 டிசம்பர் வரை உள்ளது, எனவே அதனை ஒரு சிறப்பு தீர்மானம் மூலம் செல்லாது என அறிவிக்க கட்சியின் அடிப்படை சட்டவிதி அனுமதிக்காது.
அதேபோல கட்சியின் அடிப்படை சட்ட விதியில் முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையை முன்கூட்டியே அல்லது நீக்கம் செய்ய எந்த வழிவகையும் இல்லை.
அதேபோல கடந்த 6/12/2021ல் ஜனநாயகபூர்வமாக நடத்தப்பட்ட தலைமைக்கான அந்த தேர்தலை எவரும் இதுவரை எதிர்க்கவில்லை , மேலும் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும் எதிர்க்கவில்லை.
தன்னை கட்சியை விட்டு நீக்கிய நடவடிக்கை என்பது கட்சியின் அடிப்படை விதிக்கு முரணான ஈ.பி.எஸ்.-ன் சட்டவிரோத நடவடிக்கை ஆகும்.
ஏனெனில் ஒருவரை நீக்குவது என்பது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம் ஆகும், குறிப்பாக தேழ்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை பொதுக்குழு கூடி கட்சியை விட்டு விலக்க அதிகாரமோ, சட்ட விதியோ இல்லை.
பொதுக்குழு என்பது கட்சின் கொள்கை மற்றும் நிகழ்வுகளை வரையறுப்பதற்கானது மட்டுமே.
மேலும் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணத்தின் அடிப்படையிலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அ.தி.மு.க கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது ஆகும்.
மேலும் தற்போது உள்ள கட்சியின் நிர்வாகம் என்பது சட்டவிரோதமானது, அவ்வாறு சட்டவிரோதமாக செயல்படும் கட்சி தலைமைக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரம் கிடையாது, எனவே தற்போதைய அ.தி.மு.க கட்சி மற்றும் ஈ.பி.எஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் வசம்
இரட்டை இலை சின்னத்தையும் , கட்சியையும் ஒப்படைக்க வேண்டும், எங்கள் தரப்பையே அ.தி.மு.க என்று அங்கீகரிக்க வேண்டும்.
மேலும் அ..தி.மு.க தொடர்பாக உரிமை வழக்குகள் (Civil Suit) தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, எனவே அதில் முடிவு வரும் வரை ஈ.பி.எஸ் வசம் உள்ள கட்சி தொடர்பான அதிகாரங்கள், உரிமைகளை தேர்தல் ஆணையம் திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஃபுல் எனர்ஜியுடன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!