- Advertisement -
காலியான கூடாரத்தில் புகுந்த ஒட்டகம்- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் என ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது. பண்ருட்டி ராம்ச்சந்திரன் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. டிடிவி தினகரன் கூடாரம் ஏற்கனவே காலியாகிவிட்டது. காலியான கூடாரத்தில் ஓபிஎஸ் புகுந்துள்ளார். பன்னீர் டிடிவி தினகரன் சந்திப்பானது, காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்றது. கிளைச் செயலாளருக்கு உள்ள தகுதிகூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் செல்லும் கட்சி அதோடு முடிந்துவிடும். பண்ருட்டி ராமச்சந்திரன் நிழல் கூட அவர்கூட வரவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் எத்தனை கட்சிக்கு சென்றார் என்று மக்களுக்கு தெரியும்.
ஆவின் முறைகேடு தொடர்பாக பலமுறை புகார் செய்யப்பட்டதாலேயே நாசர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபகரன் ஆகியோர் பன்னீரை கைவிட்டுவிட்டனர்.ஊழல் முறைகேடுகளை மறைக்கவே என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. மேட்ச் பார்க்க போன பன்னீர் சபரீசனை சந்தித்தது ஏன்? இதன்மூலம் திமுகவின் பி டீம் பன்னீர் என்பது உறுதியாகியுள்ளது. 30 ஆயிரம் கோடி ஊழல் ஆடியோ சர்ச்சையானதாலேயே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.