Homeசெய்திகள்அரசியல்கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

-

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்புகள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கருணாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு கள்ளச்சாராயம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதனை அருந்திய 100க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 52 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 70 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு இச்சம்பவம் தொடர்பாக அவர் விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பாக கவர்னர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல் ஏக்கள் 61 பேரும், எம்பிக்கள் 3 பேரும் கவர்னரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.

MUST READ