எடப்பாடி பழனிச்சாமியின் தஞ்சாவூர் பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் வரும் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அதிமுகவில் சசிகலா , டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை இணைப்பது இல்லை என்ற உறுதியில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி . இந்த நிலையில் சசிகலாவின் ஏரியாவான தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்ல இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி . ஆனால் திடீரென்று தனது பயணத்தை ரத்து செய்து இருக்கிறார் .
இது குறித்து அதிமுக தலைமைச் செயலகம் தெரிவிக்கும் அறிவிப்பில், எதிர்க்கட்சித் தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 4ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமத்திற்கு செல்ல இருந்தார். அங்கே அம்மா அரங்கத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான மறைந்த ரா. துரை கண்ணனின் மார்பளவு வெண்கல சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்தார்.
பின்னர் ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதாக இருந்தார். தஞ்சை மாவட்டத்தில் தற்போது கன மழை பெய்து வருவதால் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வரும் 15 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.