Homeசெய்திகள்அரசியல்முழு அம்மையாராக மாற எடப்பாடியார் போட்ட திட்டம்... அடக்கியாள நினைத்தவருக்கு அடிமேல் அடி

முழு அம்மையாராக மாற எடப்பாடியார் போட்ட திட்டம்… அடக்கியாள நினைத்தவருக்கு அடிமேல் அடி

-

- Advertisement -

கள ஆய்வுகளில் தொண்டர்களின் கொந்தளிப்பை பார்த்து, எடப்பாடி பழனிசாமி கட்சித்தேர்தல் அறிவிப்பையே கைவிட்டுட்டதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனவுடன் எடப்பாடி பழனிசாமி கைக்கு பவர் அனைத்தும் வந்து விட்டது. இதனால் அவர் என்ன நினைக்கிறாரோ அதன்படி ஒவ்வொரு செயலையும் செய்து கொண்டு வருகிறார். தனக்கு எதிராக இருக்கும் இரட்டை நிலைப்பாடு கொண்ட நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகளை சரியான நேரத்தில் கட்டம் கட்டி விடவேண்டும் என முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் நினைத்தபடி எதுவுமே நடக்கவில்லை என்கிறார்கள். இதனால், இன்னொரு திட்டத்தையும் கையில் வைத்திருந்தார்.

EPS

அதாவது, கட்சி தேர்தலை நடத்தி, தமக்கு வேண்டியவர்களை உள்ளே கொண்டுவந்து, கட்சியில் தன்னை எதிர்த்து, சமமாக நேருக்கு நேராக பேசுபவர்களே முற்றிலும் இல்லாத வகையில் செய்து விடும் திட்டத்தையும் வைத்திருந்துள்ளார். குறிப்பாக ஜெயலலிதாவை கண்டால் எல்லோரும் எழுந்து நிற்பது போல தன்னை பார்த்தாலே பயம் வரவேண்டும் என நினைத்துள்ளார். அதுவும் புஸ்வாணமாகி இருக்கிறது. கட்சியில் களஆய்வு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முன்னாள் அமைச்சர்களை நியமித்து அனுப்பினார்.

அங்கு தொண்டர்கள் வெடித்து விட்டார்கள். போகும் இடமெல்லாம் நடந்த கொந்தளிப்பை பார்த்த அதிமுக தலைவர் ரொம்பவே அதிர்ந்து போய் விட்டார்கள். ‘‘நான் சொன்னால் எல்லோரும் கேட்டுக்கிட்டு போவாங்கன்னு நினைச்சேன், இப்படி குமுறிட்டாங்களே..’’என்று ஷாக்காகி விட்டாராம் எடப்பாடி பழனிசாமி.

இதனால் இம்மாதம் நடக்கும் பொதுக்குழுவில் கட்சியின் தேர்தலை நடத்தும் அறிவிப்பை கைவிட்டு உள்ளதாக கூறுகிறார்கள். தொண்டர்களின் விருப்பத்தின்படி கட்சியை நடத்தாமல் சுயபோக்கின் காரணமாக முடிவுகளை எடுத்ததனால் கட்சியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சொந்த ஊரில் நடந்த கள கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர்களே வரவேண்டாம் என கூறி அவரே நடத்தினார். ஆட்சியில் இருந்தபோது தொண்டர்களுக்கு எதுவுமே செய்யாமல் விட்டுட்டேன். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் எல்லோரையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வேன் என தொண்டர்களை சமாதானம் செய்து வருவதாக ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள்.

MUST READ