கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார்.
முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார். கட்டுப்பாடுகள் பற்றி ஆலோசனை இதில் சில கட்டுப்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர். ஆனால் அவர் அண்ணாமலை பதவியை மாற்ற வேண்டும் என்று அமித் ஷாவிடம் கோரிக்கை வைக்க முடியாது. அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று செக் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி என வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமி தெரிவிக்காதது பல்வேறு சந்தேகங்களைக் கிள்ப்பி உள்ளது. அமித் ஷாவோ, விரைவில் கூட்டணி பற்றி அறிப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில், எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா சந்திப்பு குறித்து பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ் ஒரு அதிர்ச்சி சம்பவத்தை தனது எக்ஸ்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், ”எடப்பாடி தானே முன்வந்து தான் டெல்லிக்கு போனாராம்! மிதுன் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் தான் காரணம். வெளிநாட்டில் நடந்த ஒரு பெரிய பணபரிமாற்றத்தை வேலுமணி மூலம் துப்பறிந்து கண்டுபிடித்த அமலாக்கதுறை மிதுனை ஏழரை கோடி ரூபாயுடன் மடக்கிவிட்டது.என்னை கைது செய்தால் நான் தற்கொலை! ஓடவைத்தது” எனக் கூறியுள்ளார். ஆனால், இதில் எந்த அளவுக்கு உண்மை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.