Homeசெய்திகள்அரசியல்டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5 ல் தேர்தல் - அதே நாளில் ஈரோடு இடைத்தேர்தல் -...

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5 ல் தேர்தல் – அதே நாளில் ஈரோடு இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்

-

- Advertisement -

70 – தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டபேரவைக்கு  பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு – பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் - ஈரோடு இடைத்தேர்தல் ஒரே நாளில் - தேர்தல் ஆணையம்

70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லிக்கு ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். டெல்லியில் இன்று நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் தமிழ்நாடு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் தேதிக்கான அட்டவணையை வெளியிட்டார்.

டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார் ராஜீவ் குமார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும் எனவும், வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 17 என்றும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜனவரி 20ம் தேதி என்று அளித்த தலைமை தேர்தல் ஆணையர்  பிப்ரவரி 5ம் தேதி டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்னும் தெரிவித்தார்.

பிப்ரவரி 5ம் தேதி பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்பட்டும் என்று அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை இன்று வெளியிடப்பட்டதால் இன்று முதல் டெல்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார். சட்டபேரவைக்கு  பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு – பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்

MUST READ