Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுகவினர் வீடு வீடாக தீவிர பிரச்சாரம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுகவினர் வீடு வீடாக தீவிர பிரச்சாரம்..

-

- Advertisement -
kadalkanni

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர்  குமலன் குட்டை பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுகவினர் வீடு வீடாக தீவிர பிரச்சாரம்

பிப்ரவரி 5.ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உட்பட 58 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் இந்நிலையில் கடந்த 14.ம் தேதி முதல் திமுக வேட்பாளர் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு குமலன் குட்டை, செல்வா நகர், நாராயணவலசு, திருமால் நகர், புது ஆசிரியர் காலனி, ஆகிய பகுதிகளில் வேட்பாளர் வி.சி சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.  பொதுமக்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை விநியோகித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை மக்கள் நினைவு கூர்ந்து பிரச்சாரத்தில் வரவேற்பு தருகிறார்கள்.  ஈரோடு மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் செய்து கொடுத்திருக்கின்றார் அதையெல்லாம் நினைவு கூர்ந்து மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார்.

நாம் தமிழர் வேட்பாளரை திமுக சார்பில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதாக நாம் தமிழர் கட்சியினர்  குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், நாம் தமிழர் வேட்பாளரை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் வேட்பாளர் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்று கூட தெரியாது. திமுக சார்பில் யாரும் பேசவில்லை. அவ்வாறு பேச வேண்டிய சூழல் இல்லை. ஏராளமான சுயேட்சைகள் கூட மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள் இவர்களை எல்லாம் பார்க்க வேண்டியது என்றால் வேறு வேலையை பார்க்க முடியாது. இது போன்ற அணுகுமுறை திமுகவிடம் எந்த காலத்திலும் இல்லை.

சீமான் பிரச்சாரத்திற்கு திமுக சார்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவர் பாதுகாப்பாக வந்து பிரச்சாரம் செய்துவிட்டு செல்லட்டும் ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும்  திமுகவிற்கும் தொடர்பு இல்லை. சீமான் பிரச்சாரத்திற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.  அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு நியாயமான நாகரீகமாக போட்டியாக இருக்க வேண்டும் என்று தான் பார்க்கின்றோம் அவர்களும் ஒரு கட்சியை வைத்திருக்கிறார்கள் மக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார்கள் அவர்களை எந்த இடத்திலும் குறையாகவோ சாதாரணமாகவோ நினைக்கவில்லை அவர்களும் வாக்கு கேட்கட்டும், யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

ஆங்கிலேய உடை போட்டு மிடுக்குக் காட்டும் அவர் காவி உடையை அணியட்டும்..! ஆர்.என்.ரவியின் காவிப்பாசத்தை கழுவிக் கழுவி ஊற்றும் திமுக..!

MUST READ