Homeசெய்திகள்அரசியல்ஈரோடு மக்களின் குறைகளை போக்க முயற்சி செய்வேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு மக்களின் குறைகளை போக்க முயற்சி செய்வேன் – ஈவிகேஎஸ் இளங்கோவன்

-

- Advertisement -

ஈரோடு மக்களின் குறைகளை போக்க முயற்சி செய்வேன் – ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பேரவைத் தலைவர் அறையில், அவரது முன்னிலையில், இந்திய அரசமைப்பிற்கிணங்க, சட்டமன்றப் பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன், “மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இது முதல்வரின் 20 மாத ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். இதற்காக உழைத்த திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தலைவர்கள், காங்கிரஸ் நண்பர்களுக்கு நன்றி. ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் குறைகளை போக்க தொடர்ந்து முயற்சி செய்வேன். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை தொடர்ந்து செயல்படுவதையே விரும்புகிறேன். மதசார்பற்ற, சாதியை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் செல்வப்பெருந்தகையே காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தொடர வேண்டும்.

காங்கிரஸ் சார்பில் பதவியேற்பு நிகழ்வில், செல்வபெருந்தகை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் கட்சியின் தூய தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.” எனக் கூறினார்.

MUST READ