திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்று திமுக அரசு அரசின் முக்கிய கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதன் மூலம் திராவிட மாடல் என்கிற திமுக அரசின் கொள்கை விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் ஆளுநர் ஆர். என். ரவி.
சட்டமன்ற உரையில் திராவிட மாடல் என்று இருந்த வார்த்தையை உச்சரிக்க மறுத்ததால் பெரும் சர்ச்சை, விவாதம் நடந்து வந்தது . இந்த நிலையில் ஆளுநர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், திமுகவின் திராவிட மாடல் குறித்த கேள்விக்கு ஆளுநர் அளித்திருக்கும் பதிலில், திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கைகளைக் கொண்டது. அப்படி காலாவதியான கொள்கைகளைக் கொண்ட திராவிட மாடல் என்கிற பெயரில் திமுக ஆட்சி நடத்துகிறது . திராவிட ஆட்சி முறையை பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள் . அத்தகைய மாதிரி ஆட்சி முறை இங்கே எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் முழக்கம் மட்டும் தான். அவர்களின் காலாவதியான சித்தாந்தத்தை நிலை நிறுத்துவதற்கான ஒரு முயற்சி மட்டுமே இருக்கிறது’’ என்று விளாசி எடுத்திருக்கிறார்.
மேலும், ‘’ ஒரே பாரதம் ஒரே இந்தியா என்கிற கருத்தை ரசிக்காத ஒரு சித்தாந்தம் தான் திராவிட மாடல் சித்தாந்தம். மொழி இனவெறியை செயல்படுத்தும் கொள்கையாளர்களை திராவிட மாடல் முன்னிலைப்படுத்துகிறது. பட்ஜெட் உரையில் மற்ற மொழிகளை தவிர்த்து தமிழ் ,ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களை கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்க போகிறது என கூறப்பட்டிருக்கிறது . இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் கருத்தியல்’’ என்று கூறியிருக்கிறார்.
திமுகவின் முக்கிய கொள்கையாக இருக்கிறது திராவிட மாடல் என்பது. இதை ஆளுநர் கடுமையாக விமர்சித்து இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .மீண்டும் விவாதங்களை தொடங்கி வைத்திருக்கிறது.