Homeசெய்திகள்அரசியல்கடுப்பான அமித்ஷா! எட்டி உதைத்த அண்ணாமலை!

கடுப்பான அமித்ஷா! எட்டி உதைத்த அண்ணாமலை!

-

கடுப்பான அமித்ஷா! எட்டி உதைத்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிச்சாமி

கூட்டணி என்று வந்து விட்டால் ஆரம்பத்தில் இருந்தே ஒற்றுபட்டு இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்து அடித்துக் கொண்டிருந்து விட்டு கடைசி நேரத்தில் கைகோர்த்துக் கொண்டால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள். கட்சிகளின் தொண்டர்கள் கூட மதிக்க மாட்டார்கள். வாக்கு வங்கி கடுமையாக பாதிக்கப்படும் என்று ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எச்சரித்தும் கூட அண்ணாமலை தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மீண்டும் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி இருப்பதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை ரொம்பவே கவனமாக கையாண்டு வருகிறது பாஜக.

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?
பாஜக அதிமுக

தமிழகத்தை பொறுத்த வரைக்கும் ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் பெரும்பான்மையான எம்பிக்களை பெற்று விடலாம் என்று பாஜக கணக்கு போடுகிறது. டெல்லி தலைமை அறிவுறுத்தலின் பேரில் அண்ணாமலையும் எவ்வளவோ பேசிப் பார்த்து விட்டார். எடப்பாடி மசியவே இல்லை. பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன் , சசிகலாவுடன் இணைந்து போக மாட்டேன் என்று அழுத்தமாக இருக்கிறார்.

அண்ணாமலையை பொறுத்தவரைக்கும் தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் . அப்போதுதான் இன்றைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பாஜக ஆட்சியில் அமரும் காலம் வரும். அப்போதுதான் பாஜகவின் செல்வாக்கு உயரும் என்று நினைக்கிறார் . ஆனால் பாஜகவின் மற்ற மூத்த நிர்வாகிகள் இதற்கு உடன்படவில்லை. குறிப்பாக பாஜக டெல்லி தலைமையும் கூட இதற்கு உடன்படவில்லை. அதனால் அதிமுகவை அனுசரித்துச் செல்ல அண்ணாமலைக்கு அறிவுறுத்தி வருகிறது. அதே நேரம் அதிமுகவை சீண்டும் வேலையை செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலைக்கு தலைமை அறிவுறுத்தி இருக்கிறதோ என்னவோ அந்த வேலையை அண்ணாமலை அடிக்கடி செய்து கொண்டே இருக்கிறார். இப்போதும் தொடங்கிவிட்டார்.

ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான மோதல் வலுத்தது. இதற்கு அடுத்தபடியாக பாஜகவின் தொழில்நுட்ப அணி தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த போது ரொம்பவே கொந்தளித்து விட்டார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன், சசிகலா புஷ்பா
உள்ளிட்ட அதிமுகவினர் பாஜகவுக்கு சென்ற போது அதிமுகவில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. அதே பாஜகவினர் அதிமுகவிற்கு சென்றபோது ரொம்பவே கொந்தளித்தார் அண்ணாமலை. இதனால் இரு கட்சிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்திற்கு சென்றது. மாறி மாறி இருகட்சியினரும் வசை
பாடிக்கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் தான் அமித்ஷாவை எடப்பாடியும் அண்ணாமலையும் டெல்லியில் சந்தித்து பேசியபோது நிலைமை சுமூகமானதாக அவர்களே அறிவித்தார்கள்.
எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடப்பாடியும் அண்ணாமலையும் செய்தியாளர்களிடம் அறிவித்தார்கள். இத்தனை காலமும் கூட்டணி கட்சியை எட்டி உதைத்து விட்டு இப்போது கட்டி அணைக்கிறாரே என்று அண்ணாமலை என்று கடுமையாக விமர்சித்தனர் அரசியல் விமர்சகர்கள். இப்போது மீண்டும் அண்ணாமலை கூட்டணியை எட்டி உதைக்க ஆரம்பித்து விட்டார்.

"திட்டமிட்டப்படி ஜூலை 09- ஆம் தேதி தி.மு.க. ஊழல் பட்டியல்"- அண்ணாமலை தகவல்!
Photo: Annamalai

அதிமுக ஒன்று பட வேண்டும் என்று அமித்ஷா பலமுறை அறிவுறுத்தி இருக்கிறார். நேரில் சொல்லியும் பலர் மூலமாக அறிவுறுத்தியும் எடப்பாடி பிடிவாதமாக இருப்பதால் தனது தமிழக பயணத்தின் போது எடப்பாடியை சந்திக்க அமித்ஷா விரும்பவில்லை . அமித்ஷாவை சந்தித்தால் ஒன்றுபட்ட
அதிமுகவை அறிவுறுத்துவார் என்ற தயக்கத்தில் எடப்பாடியும் அமித்ஷாவை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடுப்பான அமித்ஷா, அண்ணாமலையை கொம்பு சீவி விட்டாரோ என்னவோ தெரியவில்லை. சீறிப்பாய்ந்துவிட்டார் அண்ணாமலை.

கடுப்பான அமித்ஷா! எட்டி உதைக்கும் அண்ணாமலை!
ஜெயலலிதா

’’தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான்
ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக இருக்கிறது . இந்தியாவின் ஊழல்மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு தான் முதலிடம்’’ என்று சொல்லி அதிமுக மீதான கோபத்தை காட்டியிருக்கிறார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலம் மிகவும் மோசமானது என்பதை ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்குத்தான் அண்ணாமலை அப்படி ஒரு பதிலை சொல்லி இருந்தாலும், இதை ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் நிகழ்வாகத்தான் பார்க்கிறது அதிமுக.

MUST READ