Homeசெய்திகள்அரசியல்விண்ணை அதிரவைக்கும் பட்டாசு சத்தம் – ஈரோட்டில் திமுகவின் வெற்றி முழக்கம்

விண்ணை அதிரவைக்கும் பட்டாசு சத்தம் – ஈரோட்டில் திமுகவின் வெற்றி முழக்கம்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றியை கொண்டாடும் வகையில்  பட்டுக்கோட்டையில் இன்று திமுகவினர் பத்தாயிரம் வாலா பட்டாசு வெடித்து, கலர் கம்பி மத்தாப்பு கொளுத்தி பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாட்டம் – விண்ணை அதிரவைக்கும் அளவிற்கு பட்டாசு சத்தம்.விண்ணை அதிரவைக்கும் பட்டாசு சத்தம் – ஈரோட்டில் திமுகவின் வெற்றி முழக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றியை கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில்

விண்ணை அதிரவைக்கும் பட்டாசு சத்தம் – ஈரோட்டில் திமுகவின் வெற்றி முழக்கம்

இதயப்பகுதியான மணிக்கூண்டு பகுதியில் நகர திமுக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஒன்று திரண்ட திமுகவினர் பத்தாயிரம் வாலா பட்டாசு வெடித்து, கலர் கம்பி மத்தாப்பு கொளுத்தி, பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து வெற்றி வெற்றி ஈரோடு கிழக்கு வெற்றி, திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பாதசாரிகள், பேருந்துகளில் பயணம் செய்து வருகின்ற பயணிகள் அனைவருக்கும் ஜிலேபி வழங்கி வெற்றியை கொண்டாடினர்.

மதுபானம்… அதிகாரப்போதை… அரவிந்த் கெஜ்ரிவாலை எச்சரித்த அன்ன ஹசாரே வருத்தம்..!

MUST READ