மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு பேசிய நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்.

மனிதநேயமும் செயல் திறனும் இந்த ஆட்சியின் அடையாளம். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் இருந்து யாரெல்லாம் பின்தங்கி இருக்கிறார்கள், யாருக்கெல்லாம் கூடுதல் உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்ப இலக்காக வைத்துக் கொண்டு அரசாங்க திட்டங்களை தீட்டுவது .பின்னர் இறுதி பயனாளி வரைக்கும் ஒழுங்கான முறையில் போய் சேர்வதற்கான செயல் திறனை உருவாக்க வேண்டும் என்றார்.
சில அரசாங்கங்களுக்கு மனித நேயம் இருக்கும் ஆனால் செயல் திறன் இருக்காது சில அரசாங்கங்களுக்கு ஓரளவுக்கு செயல் திறன் இருக்கும் ஆனால. மனிதநேயமே இல்லாமல் இருக்கும்.இந்த அரசிற்கு இரண்டும் இருக்கிறது.
இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக தெரியும் ஆனால் இதற்கு பின்புறமாக கிட்டத்தட்ட பல ஆயிரம் ஆவணங்கள் பல நூறு மணி நேரம் அடங்கியுள்ளது. பணி எல்லாம் ஒழுங்காக உள்ளதா என கண்டறிந்து யாருக்கெல்லாம் தேவையோ அதை கண்டறிந்து விண்ணப்பம் வாங்கி அதை சரி செய்து அதற்கு ஆவணங்கள் தீட்டி இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.
நிதி அமைச்சராக மாநில நிதி நிலைமையும் முதலீட்டு அளவையும் முதலீடு ஈர்ப்பது எனது கடமையோ அதே அளவுக்கு முதலமைச்சர் எண்ணத்தின் படி ஏழை எளிய சாமானிய மக்களுக்கு எந்த வகையில் எல்லாம் அரசு உதவ முடியும் என்று கண்டறிந்து அதை தெளிவாக திட்டமிட்டு அந்தத் திட்டத்தின் அடிப்படையில் அந்த நலன் போய் சேர்வது என்னுடைய கடமை அது தொடர்ந்து நான் செய்து கொண்டிருப்பேன் என்றார்.
பொதுவாக அதை மாநிலம் முழுவதும் என் கடமையாக இருந்தாலும் என் தொகுதியில் என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் என் மேல் நம்பிக்கை வைத்து இரண்டு முறை என்னை சட்டமன்ற உறுப்பினராக அனுப்பாமல் இருந்திருந்தால் இதை எதையும் என்னால் செய்ய முடியாது என்ற நன்றி கடனை மறவா இருப்பவன் நான் .
இந்த நாளில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.