இந்தியா கூட்டணி உருவாக்கியதில் எனக்கும் பங்கிருக்கிறது. இந்த கூட்டணி உடைவதற்கு ஒருபோதும் நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
“நூலாசிரியர் மு.ஞா.செ இன்பா அவர்களின் படைப்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு “மிசா முதல் கோட்டை வரை”பாகம் -1 என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது..இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல் திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட முதல் பிரதியாக மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா பெற்றுக்கொண்டார்..
தொல் திருமாவளவன் மேடை பேச்சு
தளபதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலை வெளியிடுகிற அரிய வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக இன்பா அவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் தா வேலு அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்,
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பல செய்திகள் வளம் வந்து கொண்டிருக்கிறது, நூலை வெளியிட என்னை அழைத்தார்கள், தளபதி பற்றிய நூல் என்பதால் அதில் கலந்து கொள்ள நினைத்தேன், ஆனால் அதற்கு நேரம் சொல்ல முடியவில்லை, தளபதியின் வாழ்க்கை வரலாறு, இன்பா அவர்கள் தமக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார், இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வைரமுத்து அவர்கள் வாழ்த்து செய்தியும் அனுப்பியுள்ளார்,
அரசியல் என்பது தூரத்திலிருந்து பார்க்கும் போது, அரசியல் அதிகாரத்தினால் நமக்கு பெரிதாக தெரியும், அவர் கோட்டையில் இருக்கிறார்,சொகுசு வாழ்க்கை வாழ்கிறார், அவருக்காக அதிகாரிகள் தொண்டர்கள் இருக்கிறார்கள் என, தொலைவில் இருந்து நாம் நினைப்பதுண்டு ஆனால், அதில் எவ்வளவு இன்னல்கள் இருக்கும், நிம்மதி இல்லாமல் இருக்கும், சொல்ல போனால் அது நரகமாக இருக்கும்,
ஆட்சி அதிகாரத்தை புரிந்து கொள்ள ஒரு அரசியல் புரிதல் வேண்டும், மக்களாட்சி பற்றிய புரிதல் நமக்கு தேவை, தளபதி அவர்கள், தலைவரின் மகன் என இலகுவாக நினைக்கிறார்கள், கட்சிக்காரர்கள் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள், ஆனால் கட்சி ஒரு வரம்புக்கு உட்பட்டது, ஒட்டுமொத்த வாக்காளர்களும் ஒரு வரம்புக்கு இருப்பதில்லை ஒரு கட்சி ஆதரிப்பதில்லை, மக்களின் நல் ஆதரவை பெற்றால் தான் ஆட்சிக்கு வர முடியும்,
கலைஞரின் பிள்ளை என்பதால் யாரும் அவரை ஆட்சியில் அமர வைக்கவில்லை, ஏனென்றால் கலைஞர் எவ்வளவு போராடினார் என்பதை வரலாறு நமக்கு சொல்லுகிறது.69 க்கு முன்பு மக்களுக்கு எவ்வளவு நன்மைகளை செய்திருப்பார்கள், ஆனால் 18 வருடத்திற்கு பிறகு தான் திமுக ஆட்சிக்கு வந்தது, அதற்கு அண்ணா அவர்கள் எவ்வளவு உழைத்து இருப்பார்,
அவ்வளவு கடினமான உழைப்பு கொடுத்து அண்ணா ஆட்சிக்கு வந்தார்.பெரியாரின் கொள்கைகளை பிடிப்பது ஒரு போராட்டம், பெரியாரின் கொள்கை கடைபிடிப்பது ஒரு யுத்தம், அதனை மக்களிடையே கொண்டு செல்வது பெரிய விஷயம், இது ஒரு கொள்கையை போராட்டத்தில் விளைச்சல், வெறும் சூதாட்டம் அல்ல,பணம் இருப்பவர்கள் ஆட்சிக்கு வர முடியாது, அழகாக இருப்பவர்கள் ஆட்சிக்கு வர முடியாது, சூது சூட்சு மூலம் ஆட்சிக்கு வர முடியாது, மக்களின் நம்பிக்கை பெற வேண்டும்.
மக்களின் பழைய சிந்தனைகளை மாற்றி ஒரு புதிய சிந்தனைக்கு கொண்டு வந்தது அண்ணாவின் ஒரு கருத்தில் யுத்தம், காங்கிரஸிடமிருந்து அதனை அண்ணா பெற்றார், அண்ணா ஆட்சிக்கு வந்த போது பெரியாரின் கொள்கைதான் அடிப்படை இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பெரியாரை எவ்வளவு இழிவாக பேச முடியுமோ அவ்வளவு இழிவாக பேசினார்கள், அவரை கொச்சைப்படுத்தினார்கள், சனாதன தர்மத்தின் ஆதிக்கத்தை வேரறுக்க வேண்டும் என்பதுதான் பெரியாரின் எண்ணம்,பெரியார் மற்றும் அண்ணாவின் கோட்பாடுகளை முறியடிக்க நினைத்தார்கள், அப்போதுதான் கலைஞர் வந்தார், அண்ணா மற்றும் பெரியாரின் கோட்பாடுகளை முன்னேற்றக் கொண்டு சென்றார்,
எம்ஜிஆர் மொழியால் தமிழர் அல்ல, ஆனால் அவரை யாரும் பெரிதாக விமர்சிக்கவில்லை, ஜெயலலிதா மொழியால் தமிழர் அல்ல, இவர்களை யாரும் விமர்சிக்கவில்லை, எம்ஜிஆர் மீது ஊழல் குற்றச்சாட்டில் வந்தன, யாரும் விமர்சிக்கவில்லை, ஊழல் செய்து அது நிரூபணமாகி தண்டனை பெற்றவர் ஜெயலலிதா, அவரை யாரும் ஊழல்வாதி என விமர்சிக்கவில்லை, ஆனால் கலைஞரை ஊழல்வாதி என விமர்சிக்கிறார்கள்.
இந்தியா இரண்டு இந்தியாவாக இருக்கிறது, ஊர், சேரி என்றாக உள்ளது. ஆனால் சாதி அடிப்படையில் தான் தெருக்கல் இருக்கிறது, தனி சுடுகாடு, தனி வீடு, இதை மாற்றி அமைக்க வேண்டும் என எண்ணியவர் கலைஞர் அவர்கள்.
பெரியார், அண்ணா, கலைஞர் என்னும் மாபெரும் தலைவர்களின் வரிசையில் தற்போது தளபதி ஸ்டாலின் அவர்கள் இடம் பெற்றுள்ளார்
பெரியார் முன்வைத்த அரசியல் தான் திராவிட அரசியல், திராவிட முன்னேற்ற கழகத்தின் கலைஞர் அவர்கள் 50 ஆண்டுகள் பணியாற்றினார், பெரியார் அண்ணா கலைஞர் என்ற முறையில் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறார், அதற்காக தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்கள் முதலமைச்சருக்காக,
சமூக நீதி பேசிய தலைவர்கள் இந்தியா முழுவதும் வேட்டையாடப்பட்டார்கள், அதில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்று,மிசா காலத்தில் மு க ஸ்டாலின் அவர்கள் சிறுவயதில் சிறை அடைக்க பட்டார். ஒரு இயக்கத்தை நசுக்கும் போது, அந்தத் தலைவருக்கு பின்னால் யார் வருவார்கள் என்று தான் எண்ணுவார்கள், அது போல தான் மிசா காலத்தில் மு க ஸ்டாலின் அவர்களை அழிக்க பார்த்தார்கள், ஆனால் அவர் அதிலிருந்து மீண்டு வந்து, அரசியல் வேண்டாம், பொதுவாழ்வு வேண்டாம், என ஓடி ஒழியவில்லை, கலைஞருடன் நின்று மக்கள் பணி ஆற்றினார், அண்ணாவை உள்வாங்கிக் கொண்ட ஒரு தலைவராக ஸ்டாலின் அப்போது இருந்திருக்கிறார்..
ஈழஇனக் படுகொலைகளுக்கு கலைஞர் தான் காரணம் என இன்று வரை அவதூறு பரப்பி வருகிறார்கள், ஆனால் ஒரு நாள் கூட இதைப் பற்றி வாய் திறக்காதவர்கள் அதிமுக ஜெயலலிதா அம்மையார் அவர்கள்,
கலைஞருக்கு பிறகு திமுக அவ்வளவு தான் என்று அனைவரும் கனவு கண்டு இருந்தார்கள், அந்த கனவில் மண் அள்ளி போட்டு கட்சியை வழிநடத்துபவர் மு க ஸ்டாலின் அவர்கள், அதனால் தான் இன்று வரை திமுக உடன் கூட்டணியில் இருக்கிறேன், அவரை உணர்ந்த ஒரு நோக்கத்தினால் தான் யாரும் வரலாம் என்று கூறினேன், அப்போது ஒரு செய்தியாளர் கேட்ட கேள்வி வேறு கட்சிக்கு அழைப்பு விடுப்பீர்களா என்று, அப்போதான் யார் வேண்டுமானாலும் வரலாம் என்று, அதற்குத்தான் இவ்வளவு பேசி வருகிறார்கள்,
இந்தியா கூட்டணி உருவாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு, இதற்கு பாதிப்பை ஏற்படும் வகையில் திருமா செயல்பட மாட்டான், கலைஞர் உடன் நெருங்கி பழகிய பழக்கம் எனக்கு உண்டு.
தளபதி கலைஞரின் கொள்கை வாரிசு, விசிக மற்றும் திமுகவின் கொள்கைகள் ஒன்றுதான், அதனால்தான் தொடர்ந்து பயணிக்கிறோம், மற்றவர்கள் திமுகவை வீழ்த்த ஒரு போதும் விசிக அனுமதிக்காது, இன்று ஒரு வலுவான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறோம், இன்று அங்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால், அதற்கு தளபதியின் பங்கு மிக முக்கியமானது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களுக்கு எதிராக அண்ணன் ஸ்டாலின் இருக்கிறார்,
இந்தியாவிலேயே ஒரு கூட்டணி உருவாகி தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடித்து பல தடைகளை தாண்டி பல தேர்தல்களை சந்திப்பதும் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடந்து வருகிறது அதற்கும் காரணம் தளபதியின் பங்கு மிக முக்கியமானது மட்டுமல்லாமல் அவரது ஆளுமையும், தலைமையும் தான் முக்கிய காரணம்..
திமுக கூட்டணியில் இருந்தாக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கோ, விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிகளுக்கோ தேவை இல்லை. ஆனாலும் கூட்டணியில் இருக்கிறோம் அதற்குக் காரணம் தளபதியின் ஆட்சி ஆளுமை மட்டுமே..
கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என எதிரிகள் சொல்கிறார்கள் என்றால், எதிரிகள் எவ்வளவு பயத்தில் உள்ளார்கள் என எண்ணி பார்க்க வேண்டும். கலைஞரை விட கொள்கை பகைவர்களுக்கு ஆபத்தான ஒரு பேராளுமையாக தளபதி ஸ்டாலின் உள்ளார்…