Homeசெய்திகள்அரசியல்நான்தான் சீனியர்… ஓபிஎஸ் எனக்கு ஜூனியர்- புதிய அவதாரம் எடுக்கும் ஜெயக்குமாா்

நான்தான் சீனியர்… ஓபிஎஸ் எனக்கு ஜூனியர்- புதிய அவதாரம் எடுக்கும் ஜெயக்குமாா்

-

- Advertisement -

ஜெயக்குமார் நேற்று கட்சிக்கு வந்தவரல்ல 1980ல் இருந்து என்னுடைய தலைமை ஏற்று தீவிர விசுவாசியாக இருந்து அதிமுக கட்சிக்கு பணியாற்றி ஏழு முறை சிறைச்சென்றுள்ளார் என்று ஜெயலலிதா கூறியதாக கூறிய ஜெயக்குமாரின் பேச்சு கட்சியினிரிடையே இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.நான்தான் சீனியர்… ஓபிஎஸ் எனக்கு ஜூனியர்- புதிய அவதாரம் எடுக்கும் ஜெயக்குமாா்மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா ராயபுரத்தில் நடைபெற்றது. பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ” நான் தான் மூத்த அமைச்சர் ஆனால் இன்று வந்தவர்கள் எல்லாம் பதவி வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைகிறவர்கள் கட்சிக்காக உழைக்க வேண்டும். என தனது அடையாளத்தை பதிவு செய்தாா் ஜெயக்குமார்.. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது ஐந்து பேர் மட்டுமே அமைச்சரவையில் இருந்தார்கள். ஓபிஎஸ் எனக்கு பிறகு வந்தார் தான்.

91 ல் அதிமுக வெற்றி பெற்றது முதல் ஜெயலலிதா பக்கத்தில் தான் உட்கார்ந்திருப்பேன். 2011ம் ஆண்டு  வெற்றி பெற்ற பிறகு எனக்கு அமைச்சரவை வழங்கவில்லை இதனால் மன வருத்தத்தில் இருந்த என்னை  ஜெயலலிதா தனது காப்பாளரிடம் கூறி கார்  அருகில் அழைத்து  வரச் சொல்லி  மந்திரிபதவி இல்லை என்று கவலைப்படுகிறீர்களா? உங்களை சபாநாயகர் ஆக்கி விடுகிறேன் என்று கூறினார்.  பின்னர் என்னை சபாநாயகராக அறிவித்து ஜெயலலிதா எதிரிலே நேர் பார்வையில் அமரவைத்தாா்.

பிறகு  பொய் சொல்லி எதிரிகள் செய்த சூழ்ச்சி சாபாாயகர் பதிவியிலிருந்து விலக்கினாா்கள். எனது மகனுக்கு எம்பி சீட்டு கொடுத்து எதிரிகளுக்கு ஷாக் கொடுத்தாா். எந்த கட்சியிலாவது ஒரு எம் பியும்  ஒரு அமைச்சரும் ஒரே வீட்டில் இருந்தது உண்டா  ஜெயலலிதா காலத்தில் மட்டுமே நடக்கும். என்னை அவரது குடும்பத்தைச் சார்ந்தவர் என்று சொல்லி எனது மகனின் திருமணத்தை நடத்தி வைத்தவர். என்னுடைய மூன்று மகன்களுக்கும் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தவர் ஜெயலலிதா.

எனக்கு தெரிந்ததெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் ,உண்மையாக இருக்க வேண்டும், ஜெயக்குமார் நேற்று  கட்சிக்கு வந்தவரல்ல ஜெயக்குமார் நேற்று  கட்சிக்கு வந்தவரல்ல 1980ல் இருந்து என்னுடைய தலைமை ஏற்று தீவிர விசுவாசியாக இருந்து அதிமுக கட்சிக்கு பணியாற்றி ஏழு முறை சிறைச்சென்றுள்ளார் என்று ஜெயலலிதாவே கூறியுள்ளாா். நான்  லஞ்ச லாவணத்துக்காக  சிறை செல்லவில்லை கட்சிக்காக சென்றேன் மக்களுக்காக சென்றேன்.  இன்று வரும் இளைஞர்கள் கட்சியில் சேர்ந்து உடனே பதவிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்குரிய உழைப்பை அவர்கள் செயல்படுத்த வேண்டும்.

காக்கைகள் கோட்டான்கள் கோட்டையை விட்டு வெளியேற வேண்டும். இன்னும் 10 மாதம் தான் இருக்கிறது. மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி எடப்பாடி தலைமையில் அமையும்” என்று கூறினாா்.

திமுக கூட்டணி கொள்கை ; கூட்டணி உடைக்க வாய்ப்பு இல்லை – கி.வீரமணி பேட்டி

MUST READ