ஈரான் அரசு என்னை கொல்ல முயற்சித்தால், நான் ஈரானை அழித்துவிடுவேன், எதுவுமே அங்கு மிச்சம் இருக்காது இது தொடர்பாக என் உதவியாளர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத் தயார் செய்து வரும் நிலையில் அதை நிறுத்தும் வகையில் அதிக நெருக்கடி தரும் புதிய தடை உத்தரவுகள் மீது அதிபர் ட்ரம்ப் நேற்று கையொப்பமிட்டார். அமெரிக்க அதிபராக முதல்முறையாக இருந்தபோது, ஈரான் மீது விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகளைபோல் 2வது முறை அதிபராக வந்தபின்பும் ட்ரம்ப் விதித்துள்ளார்.
இந்தத் தடையில் அமெரிக்காவின் ஒவ்வொரு துறையும், ஈரானுக்கு தடை விதிக்கும் வகையில் புதிய தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரானுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த தடை உத்தரவுகள் மீது அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்டபின் ஊடகங்களிடம் பேசுகையில் “ ஒவ்வொருவரும் இந்த தடைஉத்தரவுகள் மீது நான் கையொப்பமிட வேண்டும் விரும்பினர். அதற்கு ஏற்றார்போல் நான் கையொப்பமிட்டுள்ளேன். இந்த தடை உத்தரவு சிறப்பாக வேலை செய்யும் என நம்புகிறேன்.
இந்த தடை உத்தரவுகள் மீது எனக்கு மகிழ்ச்சி இல்லை. எனக்கு இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை, இதுதான் வலிமையாக இருக்கும் என நம்புகிறேன். ஈரானுடன் சேர்ந்து பேசி தீர்வு காண்போம் ஒவ்வொருவரும் சேர்ந்து வாழ வேண்டும். அதேசமயம், சில எச்சரிக்கைகளையும் விடுக்கிறேன். ஈரான் அரசு என்னைக் கொலை செய்ய முயன்றால், அமெரிக்கா உங்களை அழித்துவிடும், எதையும் மிச்சம் வைக்காது. இதற்கான உத்தரவுகளை என் சகாக்களுக்கு பிறப்பித்துள்ளேன்” எனத் தெரிவித்தார். கடந்த 2020ம் ஆண்டு ஈரானின் குவாட் படையின் தளபதி குவாசெம் சுலைமாணியை கொலை செய்ய அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். அதிபர் ட்ரம்ப் உத்தரவை ஏற்று அமெரிக்க ராணும் ஆள் இல்லா விமானம் மூலம் சுலைமாணியை சுட்டு வீழ்த்தியது.
அப்போதிருந்து அதிபர் ட்ரம்ப் மீது ஈரான் கொலைவெறியுடன் காத்திருக்கிறது. அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக ஈரான் நீதிமன்றம், அரசு ஆகியவை கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிபர் தேர்தலுக்கு முன்பாக டொனால்ட் ட்ரம்ப்பை கலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறையும் எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக 51வயது ஃபர்ஹத் சகேரி உத்தரவின்ப பெயரில் ஈரான் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் உள்ளனர் என்றும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.