Homeசெய்திகள்அரசியல்தவழ்ந்து போனவரின் காலில் விழுந்தால் தாழ்ந்தா போய்விடுவோம்..? ரத்தத்தின் ரத்தங்களை தடுத்த எடப்பாடியார்..!

தவழ்ந்து போனவரின் காலில் விழுந்தால் தாழ்ந்தா போய்விடுவோம்..? ரத்தத்தின் ரத்தங்களை தடுத்த எடப்பாடியார்..!

-

- Advertisement -
kadalkanni

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மாவட்டத்தில், கோ.புதூரில் அதிமுக வேட்பாளர்களை பிப்ரவரி 22ம் தேதி 2022ல் உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது எம்.ஜி.ஆர் வேடமிட்டு அதிமுக பிரமுகர் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்பூட்டினார். அடுத்து எடப்பாடி பழனிச்சாமியிடம் பாராட்டுகளை பெற மேடைக்கு வந்த அவர் எடப்பாடி பழனிச்சாமியின் கால்களில் விழுந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்தது சரியா? என அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அப்போது அதிமுகவினரே எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஆனாலும், தன்னை ஜெயலலிதாவைவிட மேலானவராக, தேவலோகத்தில் இருந்து வந்துதித்த தலைவனாக நினைத்துக் கொண்டிருகிறார் எடப்பாடி பழனிசாமியின் நினைப்புக்கு இந்த ஒரு சம்பவமும் ஒரு உதாரணம். தன் காலில் எல்லோரும் விழ வேண்டும் என பயங்கர ஆசை அவருக்குள் இருப்பதை வெளிப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல திரண்ட போது கூட்டத்திற்கு இடையே யாரும் ‘‘காலில் விழாதீங்கப்பா… விழாதீங்கப்பா’’ என இடையே பெரும் சத்தம் கேட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பண்டிகை நாட்களில் சொந்த ஊரில் முகாமிடுவதை ஒரு சென்டிமென்டாகவே வைத்திருக்கிறார். அந்த வகையில் இந்த புத்தாண்டுக்கு இங்குதான் இருப்பார் என்பது கட்சிக்காரர்களின் கணிப்பு.

இதை எதிர்பார்த்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் உள்ள வீட்டில் காலையிலேயே கட்சிக்காரர்கள் கூடினார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி மதியத்துக்கு மேல் தான் வந்துள்ளார்.

அப்படி தாமதமாக வந்தாலும் காத்திருந்த தொண்டர்களிடம் வாழ்த்துகளை வாங்கிக் கொண்டார். அப்போது அருகில் நின்ற அடிப்பொடி ஒருவர் யாரும் காலில் விழாதீங்க… யாரும் காலில் விழாதீங்க’’ என்று சவுண்டு கொடுத்துக் கொண்டே இருந்துள்ளார். இப்படி அவர் வெகு நேரம் கூவிக்கொண்டே இருந்தார். அருகில் இருந்த நிர்வாகிகளுக்கு கொஞ்சம் சங்கோஜமா இருந்துள்ளது. தொண்டர்களிடம் வாழ்த்து வாங்கிய எடப்பாடி பழனிசாமியும் ‘‘யாரும் காலில் விழாதீங்கப்பா… வீடியோ எடுக்கிறாங்க’’ என்று கூறியுள்ளார்.

வீடியோ எடுப்பதால்தான் காலில் விழக்கூடாது என சொல்கிறார்கள் என்பதை உணர்ந்த சீனியர்கள் வாழ்த்து தெரிவித்துவிட்டு நகர்ந்து இருக்கிறார்கள். அதானே, நம்ம கட்சியில் காலில் விழாதீங்கனு சொல்றது கூட, புத்தாண்டில் புதிய விஷயமாகத்தான் இருக்கிறது என நிர்வாகிகள் கலகலப்பூட்டி இருக்கிறார்கள். சிலரோ இன்னும் ஒரு படி மேலே போய், ‘தவழ்ந்து போனவர் எல்லாம் காலில் விழாதீங்கன்னு சொல்றது காலக்கொடுமை’எனச் சொல்லி நமட்டுச் சிரிப்புடன் கிளம்பி இருக்கிறார்கள்.

MUST READ