Homeசெய்திகள்அரசியல்2026 ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்... அடித்துச் சொல்லும் அண்ணாமலை!

2026 ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்… அடித்துச் சொல்லும் அண்ணாமலை!

-

- Advertisement -

கோவையில் பாஜக அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். அதன் பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.2026 ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்... அடித்துச் சொல்லும் அண்ணாமலை!அப்போது பேசிய அவர், மகிழ்ச்சியாக கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு இருப்பதாகவும், மாநில முதல்வர் ஸ்டாலின் மார்ச் முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார், பாராளுமன்றத்தின் மறு சீரமைப்பில் தமிழகத்திற்கு அநியாயம் நடக்கப் போவதாக எனக்கு தகவல் கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.

உடனடியாக அனைவரும் வாருங்கள் என 45 கட்சிகளை அழைத்து இருக்கிறார். முதல்வர் தனிப்பட்ட முறையில் பாரதிய ஜனதா கட்சிக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். முதல்வர் கடிதம் எழுதியதால் மாநில தலைவராக அதை விளக்குகிற பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இன்று அமைச்சர் அமித்ஷா மிகவும் தெள்ளத் தெளிவாக, மறு சீரமைப்பு நடக்கும் பொழுது நடக்கும், அது நடக்கும்பொழுது எப்படி நடக்கும் என்பதை கூறி இருக்கிறார். இன்றைக்கு 543 சீட்டுகள் பாராளுமன்றத்தில் உள்ளது. மறு சீரமைப்பு வரும்பொழுது 543 ல் இருந்து அது அறநூறு 700 என எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் அது விகிதாச்சார அடிப்படையில் இருக்கும்.

காரணமாக ஜம்மு காஷ்மீரில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு எம்.பி இருக்கலாம், உத்தரப்பிரதேசத்தில் 45 லட்சம் பேருக்கு ஒரு எம்பி இருக்கலாம், உயர்ந்த பின்பும் தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி இருக்கலாம். அதை தெள்ளத், தெளிவாக அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். 2024 தெலுங்கானா ஆந்திர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி காங்கிரசின் எண்ணம் பலிக்காது,  என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். அதனால் முதலமைச்சரிடம் யார் இந்த தகவலை சொன்னார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு சீட் குறைய போகிறது என்று யார் கூறினார்கள் என்று நான் கேட்கிறேன். இதற்கான பதிலை நீங்கள் கூறவில்லை என்றால், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தவறான தகவலை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கலாமா ? என்ற கேள்வியை முன் வைக்கிறோம்.

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது, யு.பி.ஐ 10 வருட ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கு வந்த பிறகும் ஐந்து மடங்கு நிதி கொடுப்பது உயர்ந்து இருக்கிறது. அதே போல தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சகோதரர் விஜய் பேசும்பொழுது, மத்திய மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டையும் குறை சொல்லி இருக்கிறார். ஓய் ப்ரோ, வாட் ப்ரோ, எல்.கே.ஜி பசங்களை போன்று சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என கூறியிருக்கிறார்.

நான் விஜய் இடம் கேட்கிறேன், practice what you preach, why bro telling lies  எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய குழந்தைகளுக்கு மூன்று மொழி, நீங்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்று மொழி, ஆனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி, what bro practice what you preach bro , சொன்னதை நீங்கள் வாழ்க்கையில் எது போன்று நடந்து கொள்கிறீர்களோ, அதுபோன்று செய்யுங்கள் ப்ரோ என்று நான் விஜய் அவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.

அதே போல கையெழுத்து இயக்கம், (Getout) ஆரம்பித்து ஒரு நிமிடத்தில் பிரசாந்த் கிஷோர் விஜய் அவர்களை பார்த்து கெட் அவுட் என்று கூறுகிறார், விஜய்க்கு எடுத்துச் சொல்லக் கூடிய பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கையை எடுத்துக் காட்டி விட்டது. Getout எல்லாம் ஒரு காரணத்திற்காக இருக்க வேண்டும், எங்கேயும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. நீங்களே மேடையில் பொய் சொல்லலாமா ப்ரோ, விஜய் அவர்கள் இதை செய்ய வேண்டாம் என அன்போடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் .

த.வெ.க வெற்றி பெற்றால் தோனியைப் போல பிரபலமாவேன் என பிரசாந்த் கிஷோர் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, பீகாரில் இருந்து ஒருவர் வருகிறார் அவருக்கு தமிழ்நாட்டில் ஒரு பெயர் கிடைக்கிறது என்றால் சந்தோஷமான விஷயம் தான். தமிழர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்பவர்கள் தானே. தமிழ்நாட்டிற்கு நல்லது யார் செய்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வோம். பிரசாந்த் கிஷோரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், இவ்வளவு செய்து ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் கொண்டு வந்து உட்கார வைத்தீர்கள் ?. அதற்காகவே மக்கள் எப்பொழுதும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என இந்தியாவில் இருந்து யார் எந்த வேலை செய்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனியை எடுத்துக் கொண்டால் மொழி தெரியாமல் வந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் காக விளையாடினார், அவரை அனைவரும் அவர் வீட்டுப் பிள்ளையாகவே ஏற்றுக் கொண்டனர். அதே போல நல்லது செய்தால் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்றாா்.

விஜயின் பவுன்சர்கள் குமுதம் ரிப்போர்ட்டரை தாக்கியது குறித்த கேள்விக்கு, ”நானும் பார்த்தேன், மிகவும் கண்டிக்கத்தக்கது,  இது போன்ற பஞ்சாயத்துகள் வரக் கூடாது என்பதற்காக தான் பாதுகாப்பு கொடுக்கிறோம். அதற்காகத் தான் crpf ஐ பயன்படுத்துங்கள் என கூறுகிறோம். சி.ஆர்.பி.எப்.இல் இருந்து வரக் கூடியவர்கள் specially trained ஆட்களாக இருப்பார்கள். பவுன்சர்களுக்கு சில இடங்களில் அவர்கள் செய்தியாளர்களா என்பது கூட தெரியாது, நீங்கள் பத்திரிக்கையாளர்கள் முதல் ஆளாய் வர வேண்டும் என்று கூறுகிறீர்கள், நம்பிக்கை அந்த அளவுக்கு பத்திரிக்கையாளர்கள் மீது மரியாதை கொடுக்கும் போது அந்த அளவுக்கு  நம்முடைய நடத்தையும் அதுபோன்று இருக்க வேண்டும் ”என்றாா்.

2026 ல் தி.மு.க வை வீட்டுக்கு அனுப்பவும் எனக் கூறி இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு,  ”இன்று நடைபெறும் மகா சிவராத்திரியை பற்றி அமைச்சர் அமித்ஷா ஈஷா யோகாவிற்கு செல்கிறார், இது போன்ற அற்புதமான நாளில் மூன்று கட்டிடத்தையும் திறந்து வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததால் இன்று மூன்று கட்டிடங்களையும் திறந்து வைத்து இருக்கிறார். அமித்ஷா அவர்கள் எதற்காக திமுக 2026 ல் வெளியே செல்ல வேண்டும் என்பதை மிகத் தெளிவாக கூறினார்.  எங்களுக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். வருகிற காலத்தில் யார் கூட்டணிக்கு வந்தாலும் ஒருமித்த கருத்தோடு சேர்ந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

நீங்கள் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவீர்கள் என்ற கேள்விக்கு,   ”நேரமும், காலமும் இருக்கிறது, நிச்சயம் அதற்கு பதில் கூறுவோம் . நிறைய இடங்களில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள், பாரதிய ஜனதா கட்சி பிரதமரை முன்னுறுத்தி, பிரதமரின் ஆட்சியை கொண்டு வருவதற்காகத் தான் போராடி கொண்டு இருக்கிறது . தேர்தல் வரும் நேரத்தில் அதை தெளிவாக அறிவிப்போம். தொடர்ந்து பேசியவர், நான் யாரைப் பற்றியும் தவறாக பேசும் ஆள் கிடையாது, strategist என்று தனி பவர் உள்ளது, பிரசாந்த் கிஷோர் ஆகட்டும், சுனில் ஆகட்டும், இவர்களெல்லாம் நான் வெளியில் இருந்து பார்க்கக் கூடிய அரசியல் ஆளுமைகள். அதே போல களத்தில் இருக்கும் ஒரு தலைவனையும் தொண்டனையும் குறைவாக மதிப்பிடாதீர்கள் என்று தான் கூறுகிறேன். அதேபோல நானும் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. வருகிற பிஹார் தேர்தலிலும் NDA தான் வெற்றி பெறும் . வியூக வகுப்பாளர்கள் வந்ததனால் களம் மாறும் என்று கூறுவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என ஒருபுறம் சொன்னாலும் கூட, ஒரு கொள்கை அடிப்படையில் இருக்கக் கூடிய பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரி இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் நாளை நண்பனாக முடியுமா என்று கேட்டால் நிச்சய முடியாது. ஏனென்றால் சித்தாந்தங்கள் வேறு, அதேபோல நாங்களும் பல கட்சிகளும் ஒன்றாக இருக்க முடியுமா என்று கேட்டால், அதுவும் முடியாது”.

நீங்கள் கோவை மக்களுக்கு வாக்குறுதி அளித்தீர்களே அது எந்த அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது என்று கேள்விக்கு,  ”cotton policy 2.0 இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது, அதை இந்த முறை பட்ஜெட்டில் கொண்டு வந்து இருக்கிறோம். கோயம்புத்தூர் சொந்தங்களுக்கு long stable cotton வேண்டும். Quality cotton with strong thread வேண்டும். நம்மிடம் அது இல்லாததால் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் இருந்து அதை import செய்கிறோம். திருப்பூர் கோயம்புத்தூருக்கு லாங் stable  காட்டன் வேண்டும், அந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முறை பட்ஜெட்டில் அதை கொண்டு வந்து இருக்கிறோம். DGFT கடுமையான நடவடிக்கை எடுத்து பங்களாதேஷில் இருந்து வரக்கூடிய ஆட்களை கட்டுப்படுத்துகிறோம். FDA விரைவில் UK வுடன் கையெழுத்திடும் போது, விற்பனை அதிகமாகும்”.

எக்ஸ்போர்ட்டை எப்படி டெவலப் செய்வது என்ற கேள்விக்கு, ”synthetic fibre ல் இருக்கக் கூடிய நிறுவனங்களை நாம் அமைச்சருடன் சந்திக்க வைத்தோம். இந்தியாவில் உற்பத்தியாக கூடிய சிந்தடிக் ஃபைபர் குறைவாக உள்ளது. அதற்கான எல்லா முயற்சிகளையும் நிதி அமைச்சர் எடுத்துக் கொண்டு இருக்கிறார்”.

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருந்தால் கூட, சில கட்சிகள் தற்போதைய பரிசு பொருட்கள் கொடுக்கிறார்களே என்ற கேள்விக்கு, ”இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள், இதை வைத்துத் தான் நாங்கள் ஜெயிப்போம் என்று தி.மு.க உட்பட எந்த கட்சி நினைத்தாலும், மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றாா்”. தொடர்ந்து பேசியவர், கரூரில் நான் பேசியதற்கு இரண்டு நாட்கள் கழித்து உதயநிதி ஸ்டாலின்  இப்படியே போச்சு என்றால் தமிழ்நாட்டில் கெட் அவுட் மோடி என்று கூறுவோம் என சொன்னார். அடுத்ததாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்னை ஒருமையில் பேசினார். ஒரு கல்வி அமைச்சர் பேட்டை ரவுடி கூட அது ஒன்று பேச மாட்டார் அந்த அளவுக்கு பேசினார். அதனால் தான் கரூர் மேடையில் தெளிவாக சொன்னேன், 50% அண்ணாமலையாக பேசுகிறேன்., மீதி 50 சதவீதம் திராவிட கட்சியின் பாணியில் பதில் சொல்லப் போகிறேன் எனக் கூறினேன, அப்பொழுதும் கூட தாய்மார்கள் எனை தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என கூறிவிட்டு தான் தொடங்கினேன். அதேபோலத் தான் உதயநிதி ஸ்டாலின் தனியாக சொல்வதற்கு பயந்து கொண்டு ஒரு 500 குழந்தைகளை பின்னால் அமர வைத்து எல்லோரும் கெட்ட அவுட் மோடி என்று சொல்லுங்கள் என கூறி இளைஞர் அணி எனக் கூறிக் கொண்டு கெட் அவுட் மோடி என கூறினார்கள்.

இரண்டு லட்சம் பேர் தி.மு.க வினர் இணைந்து கெட் அவுட் மோடி என ஹாஷ் டேக் போட்டார்கள். அடுத்த நாள் காலை 6:00 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் ஆரம்பித்தேன், மாலை 3: 27 மணிக்கு 10 லட்சத்தை தொட்டுவிட்டது. எந்த அளவுக்கு பி.ஜே.பி களத்தில் உள்ளது. என்பதை அறிந்து கொள்ளுங்கள். மார்ச் 22ஆம் தேதி மோடி அவர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தை திருச்சியில் நடத்த இருக்கிறோம். களத்திலும் பாருங்கள் சமூக வலைதளத்திலும் பாருங்கள், அவர்களை விட ஒரு படி மேலே சென்று பதில் அளி கொடுப்போம். இல்லையென்றால் அவர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள், 29 பைசா மோடி என்று கூறுகிறார்கள், அதனால் அப்படி பேசினால் மட்டும்தான் அவர்களுக்கு புரியும்.

கல்வி அமைச்சரே பேட்டை ரவுடி போன்று பேசினால், குழந்தைகளுக்கு எப்படி நாகரீகத்தை கற்றுக் கொடுப்பீர்கள்?. அமைச்சர் ரகுபதி பேசுகிறார், 2026 இல் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் ஜிஹார் சிறைக்கு போவது அண்ணாமலை என கூறுகிறார்”.

இளைஞரோடு இருக்கும் அண்ணாமலை இப்படி பேசலாமா என கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு,  ”மோடியைப் பற்றி தவறாக பேசுகிறார் மோடியின் தாயைப் பற்றி தவறாக பேசுகிறார், அப்படி இருக்கையில் நான் பதிலடி கொடுக்கிறேன். என் பின்னால் இருக்கும் இளைஞர்களுக்கு தெரியும் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று. நாளையும் உதயநிதி ஸ்டாலின் இதே போன்று பேசினால் அவர் பேசும் பாஷையிலேயே அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்றார். விஜயை கூட ப்ரோ என்று பேசினார், நானும் அவருக்கு ப்ரோ என்று கூறி மரியாதையுடன் பேசினேன். அவர் மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக் கொள்கிறார் என்றாா்”.

அதேபோல ஒவ்வொரு பள்ளிகளும் பாலியல் சீண்டல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது, ஒவ்வொரு பள்ளியின் தரமும் குறைந்து இருக்கிறது. அன்பில் மகேஷ் பொய்யாமொழி யின் மகனுக்கு பொற்காலம் ஏனென்றால் அவர் பிரெஞ்சு படிக்கிறார். தனியார் பள்ளிகளுக்கு பொற்காலம், தி.மு.க வினர் நடத்தும் பள்ளிகளுக்கு பொற்காலம், ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அது போர்க்காலம் என்றாா்.

மார்ச் முதல் வாரத்தில் தி.மு.க நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, ”அவர் கு.அண்ணாமலை என்று எழுதி எனக்கு தான் கடிதம் அனுப்பி இருக்கிறார். நாளை நான் கடிதம் எழுத போகிறேன் அதிலேயே விளக்கி எழுதப்போகிறேன். அதைத்தவிர அவர் எதைப் பற்றி பேசினாலும் அதைக் கேட்பதற்காக நான் செல்வேன் என்றார்.

அதைத்தொடர்ந்து, கோயம்புத்தூரில் விமான நிலைய விரிவாக்கம் பணி மிக வேகமாக நடைபெற வேண்டும் என்பதை எங்களுடைய முதல் குறிக்கோள் என்று கூறினார். இந்தியாவில் 200 எம்பிக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், 20% மறு சீரமைப்பில் அதிகமானால், 20 எம்.பி க்கள் அதிகமாவார்கள். அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தப்படும். இதில் யாருக்கும் அநியாயம் நடக்காது என்பதை தெள்ளத் தெளிவாக கூறிக் கொள்கிறேன் . தொடர்ந்து பேசியவர் எங்களுக்கு வியூகம் வகுப்பவர்கள் மூன்று பேர் தான்,

முதலில் மக்கள் முதலில் மக்களிடம் சென்று அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். இரண்டாவது கட்சி தொண்டர்கள், மூன்றாவது பத்திரிக்கை நண்பர்கள். இந்த மூன்று பேரிடமும் தொடர்பில் இருந்து அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்டால் போதும்.

உங்களுடைய குழந்தை நான்காவது மொழியாக வடமொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என சமஸ்கிருதத்தை கூறினீர்களே, சமஸ்கிருதம் வடநாட்டு மொழி என்ற கேள்விக்கு, ”சமஸ்கிருதம் மொழி பேசுபவர்கள் இந்தியாவில் எந்த நிலப்பரப்பில் இருந்தாலும் குறைவாக தான் இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தை விட நம்முடைய தமிழ் மொழி தொன்மையும் ,பழமையும் வாய்ந்த மொழி. காசி தமிழ் சங்கத்தில் யோகி ஜி கூறும்போது, சிவபெருமானின் வாயிலிருந்து இரண்டு மொழிகள் வந்தது, அது தமிழ் மொழியும், சமஸ்கிருதமும். அதே போல ஒரு மொழியை கற்றுக் கொள்வது தவறு இல்லை என்று நான் நினைக்கிறேன். அருகில் இருக்கும் மாநில மொழிகளை கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை” என்று கூறியுள்ளாா்.

விஜய்க்கு கெட்-அவுட் சொன்ன பிரசாந்த் கிஷோர்… அண்ணாமலை உடைத்த 30 செகண்ட் ரகசியம்..!

MUST READ