நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த அனைவரையும் அமைச்சர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்…..
நாம் தமிழர் கட்சியின் சேலம் நாடாளுமன்ற தொகுதி செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் , சேலம் மேற்கு தொகுதி முன்னாள் தலைவர் முருகன் , சேலம் மாவட்ட குத்துச்சண்டை சங்க செயலாளர் பிரேம்குமார் , சேலம் மாநகர் சூரமங்கலம் மண்டல பொறுப்பாளர் விக்னேஷ் , சேலம் மேற்கு தொகுதி துணைத் தலைவர் பிரகாஷ் , சேலம் மேற்கு கோட்ட பொறுப்பாளர் லால் பாஷா , வீரபாண்டி தொகுதியின் நாழிக்கல்பட்டி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் , சேலம் மேற்கு தொகுதி தலைவர் பிரேம் ஆகிய நிர்வாகிகளும் அவர்களுடன் 150 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை உறுப்பினர்களும் , அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகி இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு திமுக துண்டு அணிவித்து , அமைச்சர் வாழ்த்து தெரிவித்து வரவேற்றதோடு உங்களுக்கு நாங்கள் என்றும் துணையாக இருப்போம் என்றும் உறுதி தெரிவித்தார்.
நெல்லை பாஜக தலைவரும் பொதுச் செயலாளரும் கட்சியிலிருந்து விலகல் – மாவட்டத்தில் பரபரப்பு